OPPO F7 Youth | தினகரன் வாரமஞ்சரி

OPPO F7 Youth

உலகளாவிய ரீதியில் காணப்படும் இளைஞர்களால் அதிகளவு விரும்பப்படும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, F7 Youth கையடக்க தொலைபேசியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

இளம் பாவனையாளர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கையடக்க தொலைபேசி, தொழில்நுட்பத்தில் உயர்ந்த உள்ளம்சங்களை கொண்டுள்ளது. AI Beauty 2.0 தொழில்நுட்பத்தையும் Super முழுத்திரை அம்சத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. F7 Youth என்பது கண்கவர் மூன்று வர்ணங்களில் காணப்படுகின்றன. இவற்றில், Sunrise Red, Moonlight Silver மற்றும் Diamond Black போன்றன அடங்கியுள்ளன. நாடு முழுவதிலும் தனது விற்பனை நிலையங்களில் இந்த தொலைபேசி விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விலை 44,990 ரூபாவாகும்.

OPPO லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ கருத்துத் தெரிவிக்கையில்,F7 Youth என்பது இளம் பாவனையாளர்களை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் சுய வெளிப்படுத்தல்களை புத்தாக்கமான வகையில் வெளிப்படுத்த அதிகளவு ஆர்வம் செலுத்துகின்றனர்.

இதற்காக AI Beauty 2.0 தொழில்நுட்பம் F7இல் காணப்படுகிறது என்றார்.

இளைஞர்கள் தமது வாழ்க்கையை முன்னெடுக்கும் போது, தமது பிரத்தியேகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய அம்சங்களை தெரிவு செய்வதில் அதிகளவு நாட்டம் காண்பிக்கின்றனர் என்பதை OPPO உணர்ந்துள்ளது. OPPO வழங்கும் Beauty தொழில்நுட்பம் F7இனால் புகழ்பெறச் செய்யப்பட்டிருந்தது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு காணப்படுகிறது. அதுபோன்று, F7 Youthஇல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள A I 2.0 Beauty தொழில்நுட்பம் பிரத்தியேக அழகியல் கலையம்சமாக அமைந்துள்ளது. இதனூடாக நீங்கள் படங்களை எடுக்கும்போது, உங்களின் 'capture the real you' படங்களை எடுக்க ஏதுவாக அமைந்திருக்கும். AI 2.0 Beauty தொழில்நுட்பத்தினுௗடாக 296 facial points வரை படங்கள் எடுக்கப்படுகின்றன. முகங்களின் பகுதிகளை வகுத்து, ஒவ்வொரு பகுதிகளிலும் அழகியல் மேம்படுத்தல்களை வழங்குகிறது. இதனூடாக உங்களில் காணப்படும் பிரத்தியேகமான அம்சங்களை இயற்கையான வகையில் படங்களில் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

Comments