ஆயுத வர்த்தக உடன்படிக்கையினை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

ஆயுத வர்த்தக உடன்படிக்கையினை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்

போல் வில்சன்

யுத்தத்திற்குப் பிந்திய இலங்கை ஆயுத வர்த்தக உடன்படிக்ைகயினை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 21 ஆம் திகதி கொழும்பு 7, தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வினை ஆயுதக் களைவு மற்றும் அபிவிருத்திக்கான மன்றம் (FDD) ஒழுங்குச் செய்திருந்தது.

இங்கு கருத்து தெரிவித்த FDD ஒருங்கினைப்பாளர் வித்தியா அபேகுணவர்தன, சர்வதேச ரீதியில் ஆயுத விற்பனை குறித்தே பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது. யுத்த ஆயுதங்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. உலக நாடுகளில் ஆயுத வியாபாரம் தொடர்பில் 130 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. தென் ஆசியாவில் ஆயுத வர்த்தக உடன்படிக்ைகயில் கையொப்பமிடும் முதன்மையான நாடாக இலங்கை திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதற்கான கோஷங்களையே முன்னெடுக்கிறோம். அத்துடன் ஆயுத வர்த்தக உடன்படிக்ைகயில் கையொப்பமிடுவதன் மூலம் சட்டவிரோதமான ஆயுத பாவனையை கட்டுப்படுத்தலாம் என்ற ரீதியிலான கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆயுத வர்த்தக உடன்படிக்ைக என்பது ஆயுத கட்டுப்பாடோ அல்லது ஆயுத களைவோ அல்ல. மாறாக இது பொறுப்பு வாய்ந்த ஆயுத வர்த்தகத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆயுத பரிமாற்றங்களை ஒழுங்குப்படுத்தி உலகளாவிய ஆயுத வர்த்தகத்தில் பொறுப்பு, வெளிப்படைத்தன்மை என்பனவற்றை மேம்படுத்தவே ஆயுத வர்த்தக உடன்படிக்ைக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாசனம் ஐ.நா. பொதுச்சபையினால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எமது பாராளுமன்றத்தினூடாக சட்ட மூலங்களை உருவாக்கி சர்வதேசத்திற்கு முன்மாதிரியாக திகழலாம் என்றார்.

முன்னாள் சுங்க திணைக்கள இயக்குநர் சமந்த குணசேகர, பிரசன்ன குருப்பு, நிலசி லியனகே ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

சட்டவிரோதமான சிறிய ஆயுதங்கள் நாட்டுக்குள் வருகின்றன. இதற்கு நல்ல உதாரணம் அண்மையில் தென் பகுதி விகாராதிபதி மீதான துப்பாக்குச் சூட்டுச் சம்பவமாகும். இது மக்களின் பாதுகாப்பு சம்பந்தபட்டதாகும். தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் தற்போது இல்லை. அதற்கான தீர்வு காணப்பட்டுவிட்டது. மனித உரிமை குறித்தது பிரச்சினை எமக்கு உண்டு . 2005 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறிய ஆயுதங்கள் குறித்தான ஆணைக்குழு விசாரணையை வைத்தார். இது பாராட்டுக்குரியது. இது உலகத்திற்கு முன்மாதிரியான விடயமாகும். 2006 ஆம் ஆண்டில் ஆயுதக் களைவு மூலம் சுமார் 35 ஆயிரம் சட்ட விரோதமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. யுத்தத்திற்கு பின்னர் உள்நாட்டுக்குள் சட்டவிரோதமான ஆயுதங்கள் உள்ளனவா என்பது கேள்விக்குறியானது என்ற கருத்து கூறப்பட்டதுடன்,

"வெடி பொருட்களை உற்பத்தி செய்பவர்களையே பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர வேண்டும்" என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தினை வரவேற்று கருத்து கூறப்பட்டது. சட்டவிரோதமான ஆயுதங்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் ஆயுத வர்த்தக உடன்படிக்ைகயில் அரசாங்கம் கையெழுத்திட வேண்டும் என்ற கருத்தினை அங்கீகரித்தே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு "யுத்தத்திற்குப் பிந்திய இலங்கை ஆயுத வர்த்தக உடன்படிக்ைகயினை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற நூல் மும்மொழிகளிலும் ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டது. மூலமொழி ஆங்கிலமாக இருந்தாலும் தமிழ், சிங்கள மொழி பெயர்ப்புகளுடனேயே வெளியிடப்பட்டமை மற்றொரு சிறப்பம்சமாகும். இந் நூல் தமிழில் 36 பக்கங்களை கொண்டுள்ளது.

முன்னுரையில் 2017 டிசம்பர் 13 ஆம் திகதி கண்ணிவெடித் தடை உடன்படிக்ைகயினையும் (MBT), 2018 மார்ச் 1 ஆம் திகதி கொத்தணி குண்டுகள் சமவாயத்தினையும் (CCM) ஏற்றுக் கொண்டமைக்காக இலங்கை அரசாங்கத்தை ஆயுத களைவு மற்றும் அபிவிருத்திக்கான மன்று (FDD) பாராட்டியுள்ளது.

ஆயுத வர்த்தக உடன்படிக்ைக என்பது என்ன? என்ற பகுதியில் இந்த உடன்படிக்ைகயானது சர்வதேச மனித உரிமைகளையும் மனிதநேயச் சட்டங்களையும் அதன் பிரதான ஏற்பாடுகளாகக் கொண்டுள்ளதுடன் ஆயுத ஏற்றுமதிகளுக்கு அனுமதி வழங்க முன்னர் அபாய நேர்வு மதிப்பீட்டினை மேற்கொள்ளுமாறு அரசுகளை கட்டாயப்படுத்த வேண்டும் என விரிவாக எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் ஆயுத வர்த்தக உடன்படிக்ைக என்ற பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற நீடித்த 30 வருட மோதலின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மரபு ரீதியான ஆயுதங்களைப் பெற்றுள்ளது. இவ்வாயுதங்களுக்கான எந்தவிதமான கணக்குகளும் இல்லை. இலங்கை அரசாங்கமும் சில குறிப்பிட்ட மரபு ரீதியான ஆயுதங்களைப் பெற்றுள்ளது. இவை யுத்தத்தின் போது வெளியிடப்பட்ட ஊடக அறிக்ைககளின்படி வெளிப்படையாக பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தினை இல்லாதொழிப்பதுடன், மனித உரிமைகள் மீறல்களுக்கும் இவை காரணமாக அமைவதுடன் இந்த சட்டவிரோத ஆயுத விற்பனையினால் சமூக, பொருளாதார அபிவிருத்தி பாதிப்படைகின்றது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளது.

'எந்த ஒரு நாடும் ஆயுத வர்த்தக உடன்படிக்ைகயில் இணைவதற்கான தவிர்க்கவியலா காரணங்கள்' மற்றும் 'ஐக்கிய நாடுகள் ஆயுத வியாபார ஒப்பந்தம்' குறித்து உறுப்புரைகளாக விளக்கங்களுடன் விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகமாகும். இன்றைய காலக்கட்டத்தில் இந்த நூலினூடாக ஆயுத வர்த்தக உடன்படிக்ைகயில் அரசாங்கம் ஏன் கையெழுத்திட வேண்டும் என்பதை சர்வதேச ரீதியிலான விளக்கங்களுடன், தருகின்றது.

சட்டவிரோமான ஆயுதங்களை இல்லாதொழிப்பதால் அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம் என்பதையே இப்புத்தகம் கோடிட்டு காட்டியுள்ளது.

Comments