மனுவுடன் 100,000 கையொப்பங்களை சமர்ப்பித்த | தினகரன் வாரமஞ்சரி

மனுவுடன் 100,000 கையொப்பங்களை சமர்ப்பித்த

சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கெதிராகக் குரல்கொடுதது வரும் இளைஞர்களின் தொண்டு அமைப்புகள் 7 இன் கூட்டான AYAVEC, பெண்கள் மற்றம் சிறுவர் விவகார அமைச்சர் சந்ரானி பண்டாரவிடம் 100,000 கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளது. இம்மனுவானது இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கெதிரான முன்மொழிவுகளையும் கொண்டுள்ளது. இது தொடர்பாக பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்துகொண்டதோடு, AYAVEC அமைப்பின் ஆரம்ப நிகழ்வாகவும் இது அமைந்தது.

இந்நிகழ்வில் பல முக்கிய முன்னெடுப்புக்கள் இடம்பெற்றதோடு, சிறுவர் துஷ்பிரயோகத்தை முறியடிக்க, இவ்வமைப்பினால் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் அவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாகவும் அமைந்தன. இதற்கு முன்னதாக AYAVEC அமைப்பினர் நாடெங்கிலும் வீட்டுக்கு வீடு சென்று, தங்கள் இலக்கு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமான முயற்சிகளில் இறங்கினர். 100,000 கையொப்பங்களை உள்ளடக்கிய கடிதமும் சிறுவர் துஷ்பிரயோகத்தை முறியடிப்பதற்கான முன்மொழிவுகளும் பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் அவர்களின் கவனத்துக்காகச் சமர்பிக்கப்பட்டன.

அமைப்பினால் “சிறுவர்கள் தொடர்பில் கருணை காட்டுங்கள்” என்ற தொனிப்பொருளிலேயே இப்பிரசாரமானது முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் சமூகத்தின் பொறுப்பான வயதுவந்தோர் அனைவரும் மனிதாபிமானத்தை மதித்து, மனிதாபிமானமற்ற சகல நடத்தைகளையும் களையவும் இவ்வமைப்பு கோரிக்கை விடுத்தது.

Comments