Softlogic இன் 20 ஆவது SoftlogicMax புதிய காட்சியறை கல்கிஸையில் | தினகரன் வாரமஞ்சரி

Softlogic இன் 20 ஆவது SoftlogicMax புதிய காட்சியறை கல்கிஸையில்

Softlogic கல்கிஸையில் அமைக்கப்பட்டுள்ள SoftlogicMax காட்சியகத்தை புதிதாக திறந்துள்ளது. Softlogic Holdings PLC இன் இயக்குனரான அஷோக் பதிரகேவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்ட இப்புதிய Softlogic Max காட்சியகமானது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இல. 156 காலி வீதியில் அமைந்துள்ளது.

Softlogic Retail (Pvt.) Ltd இன் வாடிக்கையாளர் இலத்திரனியல் பணிப்பாளரான இந்துக பெரேரா திறப்புவிழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில், மவுன்ட் லவினியாவில் அமைந்துள்ள தமது இந்த இரு மாடிக்கட்டிடத்தின் உத்தியோகபூர்வ மாபெரும் திறப்பு விழாவானது கொள்வனவாளர்களுக்கான ஒரு திறந்த அழைப்பாகவும், மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும் என்றார்.

வாடிக்கையாளர்கள் அன்றாடம் வீட்டு உபயோகத்திற்காக கொள்வனவு செய்யும் பிரதான சாதனங்களான தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம் மற்றும் பலவற்றிற்கு இந்நிறுவனம் வழங்கிய தர உத்தரவாதமான அதியுயர் பயன்பாட்டின் அனுபவமும், சர்வதேச ரீதியில் நன்மதிப்பைப்பெற்ற சாதனங்களாக இவை இருப்பதோடு நியாயமான விலையில் அமையப்பெற்றிருப்பதுமே இதற்கான பிரதான காரணங்களாகும்.

இந்த காட்சியறையின் கீழ்மாடியானது 2,500 சதுர அடிப்பரப்பையும், முதல் மாடி 2,900 சதுர அடி பரப்பையும் உள்ளடக்கிய இரு மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

Softlogic Life Styles furniture brand மூலம் நாம் படுக்கையறை, உணவு அறை, வரவேற்பறை, போன்றவற்றிற்கு உபயோகிக்கக்கக்கூடிய கவர்ச்சியான, செளகரியமான தளபாடங்களை நியாயவிலையில் அறிமுகம் செய்கிறோம்.

படுக்கையறை தளபாடங்கள் கட்டில்கள், மேசை, டிரெஸ்ஸிங் மேசை மற்றும் அலுமாரி போன்றவற்றை உள்ளடக்குகிறது.

வரவேற்பறை தளபாடங்கள், கோப்பி மேசைகள், சோபா மற்றும் தனிக்கதிரைகளை உள்ளடக்குகிறது. உணவு அறை தளபாடங்கள் 4, 6 ஆசனங்கள் கொண்ட கதிரை தொகுதிகளையும் பிரதான மேசையையும் உள்ளடக்குகிறது.

மேலும் நாம் உடற்பயிற்சி, ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டிருப்போருக்கான வியப்பூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட வீட்டு உடற்பயிற்சி சாதனங்களையும் வழங்குகிறோம் என்றார்.

இந்நவீன காட்சியகத்தின் திறப்பு விழாவோடு சேர்த்து நாடுமுழுவதும் உள்ள காட்சியகங்களில் இது 220 ஆவது காட்சியகமாக இருப்பதோடு, அவை 20 Softlogic Max காட்சியறைகளையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments