தனுஷுக்கு அண்ணாக நடிக்கும் சசிகுமார் | தினகரன் வாரமஞ்சரி

தனுஷுக்கு அண்ணாக நடிக்கும் சசிகுமார்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிகர் சசிகுமார் தனுஷுக்கு அண்ணனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'.

கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சசிகுமாருடன் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் கவுதம் மேனன், சசிகுமார் இருவரும் அதனை உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், படத்தில் தனுசுக்கு அண்ணனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து விரைவில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சசிகுமார் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமான சுப்பிரமணியபுரம் படம் வெளியாகி நேற்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.

அதனை ஒட்டி இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் பாராட்டி டுவிட்டரில் எழுத சுப்ரமணியபுரம் படத்தின் 10-வது ஆண்டு விழா சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கும் சசிகுமார், அடுத்த ஆண்டு மீண்டும் இயக்குனராக தன்னை பார்க்கலாம் என்று உறுதி அளித்து இருக்கிறார். சுப்பிரமணியபுரத்தின் பார்ட் 2 வருமா? என்ற கேள்விக்கு வாய்ப்பே இல்லை. ஒரு சுப்பிரமணியபுரம் தான் என்றும் கூறி உள்ளார்.

Comments