திரைப்படமாகிறது முரளிதரனின் வாழ்க்ைக | தினகரன் வாரமஞ்சரி

திரைப்படமாகிறது முரளிதரனின் வாழ்க்ைக

வெங்கட் பிரபு சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் வெங்கட்பிரபு சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதை உறுதி செய்து இருக்கிறார். அந்த படத்தை சுரேஷ் காமாட்சி இயக்கவிருக்கிறார்.
திரைக்கதை உருவாக்க பணிகள் சென்று கொண்டிருக்கிறது. அது முடிந்த பின்னர் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள், படத்தின் பெயர் முடிவு செய்யப்படும். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்படும்’ என்று கூறி இருக்கும் அவர், அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக இயக்கப் போகிறார்.
இதற்காக முத்தையா முரளிதரனை சந்தித்து பேசி இருக்கிறார். விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை நிறைய திருப்பங்கள் நிறைந்தது. அவர் பந்து வீசும் முறையை சந்தேகித்து சர்வதேச கிரிக்கெட் ஆணையம் நிறைய சோதனைகள் வைத்தது.
அவற்றில் இருந்து மீண்டு வந்து உலக சாதனைகளை படைத்தார்.
கிரிக்கெட் மீது அதீத விருப்பம் காட்டும் வெங்கட் பிரபு கிரிக்கெட்டை மையப்படுத்தி சென்னை 600028 படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments