மிரட்டலால் டுவிட்டரிலிருந்து விலகிய பூனம் கவுர் | தினகரன் வாரமஞ்சரி

மிரட்டலால் டுவிட்டரிலிருந்து விலகிய பூனம் கவுர்

நெஞ்சிருக்கும்வரை, வெடி பட நாயகி பூனம் கவுர் போனில் வந்த மிரட்டலால் டுவிட்டரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களால் நன்மை எவ்வளவோ அதே அளவு தீமையும் இருக்கிறது என்பதை உணர்த்தி உள்ளார் நடிகை பூனம் கவுர்.

நெஞ்சிருக்கும்வரை, வெடி, நாயகி உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் பூனம் கவுர்.

தமிழில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கில் பிரபலமான நடிகை. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் திடீர் என்று “டுவிட்டரில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். எப்போது திரும்பி வருவேன் எனத் தெரியாது’ என்று பதிவிட்டு வெளியேறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் ஆபாச இணையதளம் ஒன்றில் பூனம் பற்றி தவறாக பதிவிட்டிருந்தனர். இதன் பின்னணியில் இயக்குனர் ஒருவர் இருப்பதாகக்கூறி அவரை திட்டி பதிவிட்டிருந்தார் பூனம். அந்த இயக்குனர் யார் என்பதைக் குறிப்பிடவில்லை. அதன் பின் பூனம் கவுர் சமூக வலைதளங்களிலும், தொலைபேசியிலும் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Comments