யாழ். குடாநாட்டின் பாதுகாப்புமீது அதிக கவனம் ெசலுத்த வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

யாழ். குடாநாட்டின் பாதுகாப்புமீது அதிக கவனம் ெசலுத்த வேண்டும்

யாழ். குடாநாட்டில் சட்டவிரோத சம்பவங்கள் தலைவிரித்தாடிவருவதால் அங்கு சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி. ராம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இதுவிடயம் சம்பந்தமாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நேரில் சந்தித்து எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களுக்குப் பெயர்போன யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு... (தொடர்)

யாழ். மண்ணில் இன்று அரங்கேறிவரும் சில சம்பவங்களை ஊடகங்கள் வாயிலாக பார்க்கையில், கேட்கையில் பெரும் துயரமாக இருக்கின்றது. மறுபுறத்தில் இதன் பின்புலம் என்னவாக இருக்குமென்ற அச்சமும் எம்மை பலகோணங்களில் சிந்திக்கவைக்கின்றது.

ஏதேனுமொரு சட்டவிரோத சம்பவத்துடனேயே இன்று பொழுதுகள் விடிகின்றன. இரவு நேரங்களில் வெளியில் வரவும், தனிமையில் வாழ்வதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர். போர்க்காலத்தில்கூட இப்படியானதொரு சூழ்நிலை இருக்கவில்லை. துப்பாக்கி வேட்டுகள் முழங்கினாலும் - மக்களின் நடைமுறை வாழ்வில் பெரிதாக ஐயம் இருக்கவில்லை.

இவ்வாறானதொரு யுகம்தான் மீண்டும் உதயமாக வேண்டும் என்ற தொனியிலேயே விஜயகலா மகேஸ்வரனும் கருத்து வெளியிட்டிருந்தார். கருத்தின் ஆழத்தை, பொருளை பகுத்தறிந்து பார்க்காது அதை பயங்கரவாத உரையென விமர்சிப்பது கவலைக்குரிய விடயமாகும். அரசியலமைப்பை மீறும் உரையென விமர்சிப்பவர்கள், கருத்து சுதந்திரம் குறித்து சிந்திக்காததும் வேதனையளிக்கின்றது.

வடக்கில் இன்று கேரள கஞ்சா, குடு உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து வருகின்றது.

Comments