விலை அதிகரிப்பு பற்றி செவ்வாயன்று இறுதி தீர்மானம் | தினகரன் வாரமஞ்சரி

விலை அதிகரிப்பு பற்றி செவ்வாயன்று இறுதி தீர்மானம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விநியோகிக்கப்படும் எரிபொருள்களின் விலை தொடர்பில் செவ்வாய்க் கிழமையன்று அரசாங்கம் தீர்மானிக்கும் என அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. அன்றைய தினம் எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் விலை அதிகரிப்பு பற்றி செவ்வாயன்று... (தொடர்)

விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதிகரிப்பை அமுல்படுத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

எரிபொருள் விலைகள் கடந்த ஆறாந்திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எனக் கடந்த ஐந்தாம் திகதி நிதியமைச்சு அறிவித்திருந்தது. எனினும், ஆறாந்திகதி காலை பெற்றோலியக் கூட்டுத்தாபன விலைகளில் மாற்றம் இல்லையென்றும் பழைய விலைக்ேக விற்குமாறும் கூட்டுத்தாபனம் சுற்று நிருபத்தின் மூலம் அறிவித்திருந்தது. இருந்தபோதிலும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், நிதியமைச்சின் பணிப்பிற்கமைய புதிய விலையை அமுல்படுத்தியுள்ளது.

Comments