இலங்கையின் பாரிய இணையவழி சுற்றுலாத்துறை வலையமைப்பாக ‘YohoBed’ | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் பாரிய இணையவழி சுற்றுலாத்துறை வலையமைப்பாக ‘YohoBed’

இலங்கையின் சுற்றுலாத்துறை விடுதிகள்சார் தொழிற்றுறையில் முன்னோடியாகத் திகழும் Yoho Bed நிறுவனம், தனது தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மற்றும் விரைவான வளர்ச்சி போன்றவற்றின் ஊடாக ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சந்தையில் துறைசார் அங்கீகாரத்தைப் பெற்று விளங்குகின்றது. அதுபோல, பாரியளவில் வளர்ந்து வருகின்ற சுற்றுலாத்துறை மற்றும் நாளடைவில் மாறுபட்டு வருகின்ற சுற்றுலாவாசிகளின் பயண முறைமைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு முற்றிலும் மாறுபட்ட சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது. மேலும், மலிவானதும் தரத்தில் சிறந்ததுமான தங்குமிட வசதிகளை வழங்குவதன் மூலம், சுற்று லாசார் பயணங்கள் என்பதனை அனைத்து விதமான பயணிகளுக்கும் சாத்தியமானதாக மாற்றியமைத்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 20,000 பயணிகளுக்கு சிரமமற்ற மற்றும் நம்பகமான தங்குமிட அனுபவத்தை YohoBed நிறுவனம் வழங்கியிருக்கின்றது. ரஷ்யா, சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் Yoho bed நிறுவனத்தின் தங்குமிட வசதிகளுக்கு மிகுந்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.

சாதாரண முறைமைகளைக் காட்டிலும் சிறப்பான விருந்தோம்பல் சேவைகளை தன்னகத்தே கொண்டிருந்த போதிலும், அனுபவமின்மை மற்றும் தொழில்நுட்ப சிறப்புத் தேர்ச்சியின்மை போன்றவற்றின் காரணமாக பெரும்பாலான விடுதிச் சேவைகளால் இத்துறையில் நிலைத்து நிற்க முடிவதில்லை. அவ்வாறான விடுதிச் சேவை வழங்குனர்கள்

YohoBed நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளும் தனித்துவமான பங்காளித்துவத்தின் மூலம் தங்களது சேவையில் குறிப்பிடத்தக்க தொழிற்பாட்டு மற்றும் தொழில்நுட்ப தரமேம்படுத்தல் வசதிகளைப் பெற்றுக் கொள்கின்றன. விடுதிச் சேவை வழங்குனர்கள் விருந்தினா்களின் தேவைகள் தொடர்பில் அடிப்படையில் அதிக கவனம் செலுத்தவும், தரமான சேவை வழங்கல் தொடர்பான YohoBed நிறுவனத்தின் நேரடிக் கண்காணிப்பை பெற்றுக் கொள்ளவும் இப் பங்காளித்துவம் வழிவகுக்கின்றது.

Comments