உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவை உருவாக்க | தினகரன் வாரமஞ்சரி

உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவை உருவாக்க

 சர்வதேச ரீதியில் பல பில்லியன் டொலர் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டெவிஸ்டொக் குழுமம், The Elovate குழுமம் என்ற பெயரில் இலங்கையிலும் தனது நிறுவனத்தை ஆரம்பிக்கிறது. அட்லஸ் லெப்ஸ், பிக்ஸல் இன்டர்நஷனல், ரெபேயா மற்றும் சேர்ஜ் குளோபல் ஆகியவற்றை உள்ளடக்கிய The Elovate குழுமமானது, சர்வதேச நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, வன்பொருள், மென்பொருள் உட்பட பிக் டேட்டா மற்றும் சந்தைப்படுத்தலுடனான ஆய்வுகள் ஆகிய பிரிவுகளில் இலங்கையின் திறமைக்கு வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து, தொழில்நுட்பத் தீர்வுகளையும் வழங்கவிருக்கிறது.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையம் ஒன்றாகக் கருதப்படும் இலங்கை, அதிக வாய்ப்புக்களையும், இளம் திறமையையும் கொண்ட ஒரு சிறந்த தேசமாகும். எனவே, The Elovate குழுமம் ஊடாக இலங்கையின் இளம் திறமைக்கு பெரும் வாய்ப்புக் கிடைக்கவிருக்கிறது. இதன் மூலம் இலங்கையர்கள் பிக் டேட்டா மற்றும் ஏனைய தொழில்நுட்பப் பகுதிகளிலும் சிறந்த வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியும்.

இலங்கையில், சுமார் 18 மாதங்களுக்கு முன்னர் ஐந்து ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது, கொழும்பு முழுவதும் 150 ஊழியர்களுடன், மூன்று அலுவலகங்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. டெவிஸ்டொக் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி திருமதி ஹேலி இவான்ஸ் இனால் வழிநடத்தப்படும் The Elovate குழுமமானது, திறமை மற்றும் அனுபவம் என்பனவற்றின் மூலம் சிறந்த கலாசாரத்தை உருவாக்கி, நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியருக்கும் உயர்ந்த அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

The Elovate குழும நிறுவனத்தின் தலைமைத்துவமானது, டெவிஸ்டொக்கின் திருமதி ஹேலி இவான்ஸ், அட்லஸ் லப்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மத்தி ஹியோப், பிக்ஸல் நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாவும் பணிப்பாளருமான பிரசாந்த ஜயமஹா, ரெபேயா நிறுவனத்தின் ஆரம்ப கர்த்தாவும் பணிப்பாளருமான அமில ஜயதிலக, சேர்ஜ் குளோபல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பானுக ஹரிச்சந்திர ஆகியோரைக் கொண்டுள்ளது.

Comments