சூழல் நேய கடன் திட்டத்துக்கு செலான் வங்கி உதவி | தினகரன் வாரமஞ்சரி

சூழல் நேய கடன் திட்டத்துக்கு செலான் வங்கி உதவி

புவி வெப்பமடைதல் மற்றும் காபன் வெளியீட்டை குறைத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிகளவு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், நிலைபேறான தொழிற்துறை அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு தொழிற்துறைகளை ஊக்குவிப்பதற்கான பரந்தளவு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அழைப்பை ஏற்று, செலான் வங்கி இவ்வாறான செயற்திட்டமொன்றில் கைகோர்த்துள்ளது. தகைமை வாய்ந்த தொழிற்துறைகளுக்கு கடனாக சுழற்சி நிதித் திட்டமாக இந்த உதவி வழங்கப்படுவதுடன், இதனூடாக சூழலுக்கு நட்பான தொழிற்துறை சூழலை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பின் பிரகாரம், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு நாட்டில் தொழிற்துறை அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதில், சூழலுக்கு நட்பான தொழிற்துறை மயமாக்கல் என்பது சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் மத்தியில் அதிகளவு பேசப்படும் விடயமாக அமைந்துள்ளது.

இந்த கடன்களினூடாக, தொழில்முயற்சியாளர்களுக்கு சூழல்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தமது உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய தொழிற்துறைசார் மாசுகளை குறைத்தல், கழிவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளல், வளங்களை மீட்டல் மற்றும் சேமிப்பு, மாசு கட்டுப்படுத்தல் மற்றும் செலவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய வடிவமைப்பு, வலு நுகர்வு மற்றும் சூழல் சார் மேம்படுத்தல் நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஒரு விண்ணப்பத்துக்காக வழங்கப்படும் ஆகக்கூடிய கடன் தொகை ரூ. 30,000,000 ஆக அமைந்துள்ளதுடன், மீளச் செலுத்தும் காலம் 120 மாதங்களாகும் (10 வருடங்கள). இதில் 24 மாதங்கள் (2 வருடங்கள்) சலுகைக் காலமும் அடங்கியுள்ளது. சூழல் நேய கடன் திட்டம் ii சுழற்சி நிதித் திட்டத்துக்கான வட்டி வீதம் வருடமொன்றுக்கு 6.5மூ ஆக அமைந்துள்ளது. 100 சதவீதம் மீள் நிதியளிப்புடன் மொத்த செயற்திட்ட செலவில் 25 சதவீதத்தை வாடிக்கையாளர் பங்களிப்பு செய்ய வேண்டும்.

Comments