Android One இணைப்பினால் புதியதோர் அனுபவம் | தினகரன் வாரமஞ்சரி

Android One இணைப்பினால் புதியதோர் அனுபவம்

Nokia கையடக்கத் தொலைபேசிகளின் உறைவிடமான HMD Global நிறுவனம், Google இனால் Android One நிகழ்ச்சித்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைபேசித் தொகுதியொன்றுடன் கூடிய முதலாவது பூகோள பங்குதாரராக மாறி தூய, அறிவுபூர்வமான பாதுகாப்பான புதியதோர் Android அனுபவமொன்றை உங்களுக்குக் கொண்டுவரும் வாக்குறுதியை நிறைவேற்றியது.

இதன் காரணமாக Android One தளத்தின் அடிப்படையில் செயற்படும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான இற்றைப்படுத்தல்கள், பாதுகாப்புத் திட்டுக்கள், மற்றும் Chrome போன்ற Google பிரயோகங்களுக்குரிய (Apps) அதிகபட்ச அனுபவத்தை மற்றவர்களை விடவும் முந்திக் கொண்டு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பிரதானமான நன்மையாக அமைகிறது. இது தவிர Android One இன் கீழ் செயற்படும் ஒவ்வொரு தொலைபேசி மாதிாிக்கும் ஒரே விதமான தூய அனுபவமொன்று கிடைக்கிறது. அந்தந்த தொலைபேசி மாதிரிகளிலுள்ள சிறப்பம்சங்களில் இவ்வனுபவம் மேம்படுகிறது.

இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற புதிய Nokia ஸ்மார்ட் ஃபோன் இரண்டு – Nokia7 Plus மற்றும் புதிய Nokia 6 – Google னால் வடிவமைக்கப்பட்ட உயர் தரத்திலான மென்பொருள் அனுபவமொன்றைப் பெற்றுத்தந்து Android One குடும்பத்தில் இணைந்தது.

இத்தொலைபேசி மாதிரிகளை Google னால் தயாரிக்கப்படும் நவீன AI தொழில்நுட்பத்தினால் வலுவூட்டப்படும் வசதிகள் மற்றும் உயர் தரத்திலான பாதுகாப்பு காரணமாக அதிக காலம் புதிய தொலைபேசியைப் போன்றே பாவிக்க முடியும். தூய Android உடன் வரும் Nokia ஸ்மாரல்ஃபோன்கள், பற்றரியை தின்றுதீர்க்கும், தொலைபேசியின் வேகத்தைக் இல்லாமற் செய்யும் தேவையற்ற App கள் மற்றும் குப்பைகளைக் கொண்டிராததால், அதிக காலம் நீங்கள் இரசித்து அனுபவிக்க இடமளிக்கிறது.

இத் தொலைபேசியுடன் அத்தியாவசியமான சில Appகள் மாத்திரமே வருவதால் அதிக இடம் தொலைபேசியில் எஞ்சுவதோடு வாழ்க்கையில் முதல்வரிசையில் நிற்பதற்குத் தேவையாகும் புதிய தொழில்நுட்பமும் உங்களுக்குக் கிடைக்கிறது.

Comments