விழிகளிலே | தினகரன் வாரமஞ்சரி

விழிகளிலே

நெடுஞ்சாலை வழியே

தன்னந் தனியே -

நானும் நினைவுகளும்,

ஈரம் கொண்ட

இதமான காற்று

என் மேனி தழுவ

நான் சிலிர்த்ததேனோ..?

ஒரு தேவதை

வரவினில் தானோ..?

நீல வானுடுத்த வெண்பஞ்சு மேகம்

கார் குழலாக....

வில் புருவம் இரண்டு

கவி பேசும் விழியிலிருந்து - அர்ஜுனா...!

நீ எய்திய அம்பு -

அவள் பார்வையிலிருந்து...

என் நெஞ்சைத் துளைத்தது

ஏனோ.....?

காதல் காதல் என்று - கவி பல பேச

நானும் ரசிகனாகிய தருணம்

காதல் அறிந்தேன் - பெண்ணே!

உன் விழிகளிலே...

அறிவு அர்த்தமற்றுப் போனது

நீ மட்டும் - என் உலகில்

அழகி என்று ஆனது

பெண்ணே!

பெண்ணாய்ப் பிறந்ததன்

அர்த்தம் அறிந்தவளே...

கண்ணியம் கண்டேன்

காதல் கொண்டேன்-

கம்பன் இருந்தால்...

உன் கண்ணை -அவன்

கவியினில் எழுதுவான்

மூவேழு வருடங்கள் சிறை வைத்த

என் இதயம்...

உன் விழிகளிலே

நெருங்கி விழுந்ததே!

மாயவளே...!

உன் பின்னே

-கால்கள் நகருதே...

வயதை அறிந்தேன்

வாழ்வின் அர்த்தம் புரிந்தேன்

உன்னை காணத்தானோ...?

தனிமைத் தவம் கிடந்தேனோ...?

சிக்கித் தவிக்கின்றேன்

பெண்ணே...!

உன் விழிகளிலே...

Comments