Sunsilk Natural Re-Charge அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

Sunsilk Natural Re-Charge அறிமுகம்

கூந்தல் என்பது பெண் ஒருவரின் கவசம் அவரின் வலிமையின் மூலமாகவும், ஒவ்வொரு பெண்ணின் இயல்புகளை வெளிப்படுத்தும் பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளது. இலங்கை பெண்களுக்கு வரம்பற்ற பிரத்தியேக தன்மைகளை வெளிப்படுத்தும் முகமாகவும் அவர்களுடைய ஆளுமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவரும் நோக்கில், சன்சில்க் அண்மையில் இயற்கை சேர்மானங்களுடனான 'Sunsilk Natural Re-charge” புதிய ஷம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரிப்புகளை அறிமுகம் செய்திருந்தது. கூந்தலுக்கு வேரிலிருந்து நுனி வரை செழுமையூட்டும் வகையில் இந்த தயாரிப்புகள் அமைந்துள்ளன.

யுனிலீவர் ஸ்ரீலங்காவின் பிரத்தியேக பராமரிப்பு பிரிவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் நிலுஷி ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை பெண்களுடன் மகிழ்ச்சிகரமான பயணத்தை சன்சில்க் தொடர்ந்துள்ளது. தொடர்ச்சியாக பசுமையான மற்றும் புத்தாக்கமான வழிகளில் அவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் கனவுகளை எய்த அவசியமான சுதந்திரத்தை வழங்குவதுடன், புதிய வழிகளை இனங்காண உதவியாக அமைந்துள்ளது. நாம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புதிய போக்குகள், தூய்மையாக்கல் மற்றும் செழிப்பூட்டல் என்பனவற்றை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், பெண்ணுக்கு தமது கூந்தலை சாதாரண அங்கமாக மட்டும் கொண்டிராமல், தமது வரையறைகளற்ற பண்புகளை வெளிப்படுத்தக்கூடிய அம்சமாக திகழச் செய்ய ஏதுவாக எமது பொருட்களை மேம்படுத்தியுள்ளோம். புதிய Sunsilk Natural Re-charge தெரிவுகளுடன், நாம் இலங்கை பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளோம். எளிமையான அதிகளவு பரீட்சியமான மூலப்பொருட்களை இவற்றில் சேர்த்துள்ளதுடன், நாளாந்தம் அவர்களுக்கு அவற்றின் அனுகூலங்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

Sunsilk Natural Re-charge தெரிவுகளில் மூன்று வகைகள் அடங்கியுள்ளன. இவை இலங்கை பெண்களுக்காக கவனமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் மிகவும் பொதுவான கூந்தல் பராமரிப்பு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. Coconut Water and Aloe Vera தெரிவு என்பது, கூந்தலுக்கு எழில்மிகுந்த அடர்த்தியை வழங்குவதுடன், நாட்டின் காலநிலைக்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது.

Comments