அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று விசேட அறிக்கை | தினகரன் வாரமஞ்சரி

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று விசேட அறிக்கை

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டியில் இன்று நடைபெறும் கட்சியின் 28ஆவது பேராளர் மாநாட்டில் முக்கியமான அறிவிப்புபொன்றை விடுக்கவிருக்கின்றார்.

அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுவரும் சவால்கள், நெருக்கடிகளுக்கு காத்திரமான தீர்வை எட்டமுடியாத நிலை காணப்படுவதாலும், புதியதேர்தல் முறையால் சிறுபான்மைச் சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு இந்தச் சவால்களை வெற்றிகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்றைய பேராளர் மாநாட்டில் முக்கிய உரையாற்றவிருக்கின்றார்.

கண்டி பொல்கொல்ல மகிந்த ராஜபக்ஷ அரங்கில் நேற்று காலை முதல் முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. நாட்டில் சகல பகுதிகளிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது புதிய உயர்பீட உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெறவுள்ளது. மாலை மூன்று மணிக்கு நடைபெறும் பேராளர் மாநாட்டின் இரண்டாவது அமர்வின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார்.

எம்.ஏ.எம். நிலாம்

 

Comments