அநாவசியமான பயணங்களை தவிர்த்துக் கொள்ள உதவும் | தினகரன் வாரமஞ்சரி

அநாவசியமான பயணங்களை தவிர்த்துக் கொள்ள உதவும்

தரமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு நிலைபேறான அபிவிருத்திச் செயற்பாடுகளை நிதியியல் துறை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கம்பனி செயலாளரும் பொது ஆலோசகருமான தேஜா சில்வா கருத்துத் தெரிவித்தார்.

நிலைபேறான அபிவிருத்தியில் வங்கியின் பங்கு தொடர்பில் தேஜா சில்வா விவரிக்கையில் ”எமது பங்காளர்களின் பெறுமதியை மேம்படுத்தி பாதுகாப்பதில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தன்னை ஈடுபடுத்தியுள்ளது. இதனூடாக அவர்களுக்கு தரமான வாழ்க்கையை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். எமது பங்காளர்களுக்கு சிறந்த நிதித் தீர்வுகளை வழங்குவதுடன், தரமான வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கடுமையான வெள்ளம் அல்லது வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அமைந்துவிடுகின்றமை காரணமாக ஏற்படக்கூடிய பாரியளவிலான சூழல், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் மற்றும் இழப்புகள் போன்ற இடர்நிலை தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். ஆனாலும், நாடளாவிய ரீதியில் கிளைகளை கொண்ட நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், சமூக மற்றும் சூழல் நிலைகளை மேம்படுத்துவதில் வங்கி நேர்த்தியான பங்களிப்பை வழங்குவதுடன், இந்த இடர்நிலைகளை சமாளிப்பது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கும்” என்றார்.

தேஜா சில்வா கருத்துத் தெரிவிக்கையில், கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில், எமது கிளையின் (hub)செயற்பாடுகளினூடாக வெளியிடப்படும் காபன் அளவை நாம் கணிப்பிடுகிறோம். 40 KW சூரிய PV கட்டமைப்பை எமது பாரிய சொந்த அலுவலகத் தொகுதியில் நிறுவியிருந்தனூடாக எமது செயற்பாடுகளினுௗடாக வெளியிடப்படும் புகை கசிவுகளை குறைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். பொருளாதார தெரிவுகளான Climate Smart Agriculture, Smart Mobility மற்றும் Green Building போன்றவற்றுக்கு எமது நிதிசார் உதவிகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், உறுதியான இயக்கத்தை மேற்கொள்ளவும் பங்களிப்பு வழங்குகிறது. என்றார்.

டிஜிட்டல் மேம்படுத்தல்களினூடாக நிலைபேறான பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடிந்திருந்தமை தொடர்பில் தேஜா சில்வா தெரிவிக்கையில், எமது டிஜிட்டல் வங்கியான FriMi, என்பது எமது வாடிக்கையாளர்களுக்கு கடதாசியில்லாத அநாவசியமான பயணங்களை தவிர்த்துக் கொள்ள பங்களிப்பு வழங்குகிறது. டிஜிட்டல் ஊடகங்களினுௗடாக நாம் நிதி உள்ளடக்கங்களை நாம் எய்துகிறோம், திறந்த புத்தாக்க கொள்கைகளை வெளிப்படுத்துவதற்காக நாம் Nations Open API வங்கியியலையும் அறிமுகம் செய்துள்ளோம். " என்றார்.

Comments