சிறுவர்களின் அழகியல் திறன்களை வளர்க்கும் Sarvodaya Finance | தினகரன் வாரமஞ்சரி

சிறுவர்களின் அழகியல் திறன்களை வளர்க்கும் Sarvodaya Finance

Sarvodaya Development Finance Ltd, சிறுவர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்கும் அழகியல் செயலமர்வை பத்தரமுல்லை அபே கமவில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. புகழ்பெற்ற மலேசிய ஓவியர் லிம் ஜி யுவான் மற்றும் இலங்கையின் மூத்த ஓவியர் தேசமான்ய ஜெயசிறிசேமகே ஆகியோர் இத்துறைசார்ந்த தமது அனுபவங்களைப் பகிர்ந்து, பங்குபற்றிய இளம் சிறார்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கினர்.

சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரும், தலைவருமான கலாநிதி ஏ.ரீ. ஆரியரட்ண தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், Sarvodaya Development Finance (SDF) இன் பணிப்பாளர் சபைத் தலைவர் சண்ண டி சில்வா, SDF இன் பணிப்பாளரான கலாநிதி வின்யா ஆரியரட்ண SDF இன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளர் சமிந்த ராஜகருணா மற்றும் SDF இன் பிரதம நிறைவேற்றதிகாரி தர்மசிறி விக்கிரமதிலக ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

நாடளாவியரீதியில் ஓவியத்தில் ஆர்வமுள்ள வளர்ந்துவரும் இளம் ஓவியர்களை வளர்க்கும் ஒரு மேடையை அவர்களுக்கு வழங்கும் வகையில், இவ்வாண்டின் ஆரம்பத்தில் ‘Pancha Dinana Siththara’ என்ற பெயரில் நாடளாவியரீதியிலான ஓவியப் போட்டியொன்றை Sarvodaya Finance தனது சிறுவர் சேமிப்புக் கணக்கான‘Pancha’ மூலமாக முன்னெடுத்திருந்தது.

பிராந்திய ரீதியாகவும், தேசிய மட்டத்தில் இரு கட்டங்களாக இப்போட்டி நடாத்தப்பட்டதுடன், மூன்று வயதுப் பிரிவுகளின் கீழ் (4 முதல் 6, 7 முதல் 10 மற்றும் 11 முதல் 14) நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் 1,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதற்குக் கிடைக்கப்பெற்றிருந்தன. அவற்றின் மத்தியிலிருந்து 150 ஓவியங்கள் தெரிவுசெய்யப்பட்டன. அந்த 150 மாணவர்களும் அவர்களுடைய ஓவியங்களும் Ape Gama வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டு, புகழ்பெற்ற மலேசிய ஓவியரான லிம் ஜி யுவான் மற்றும் இலங்கையின் மூத்த ஓவியரான தேசமான்ய ஜெயசிறிசேமகே ஆகியோர் அவற்றின் மத்தியிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று வெற்றியாளர்கள் வீதம் ஒன்பது வெற்றியாளர்களைத் தெரிவு செய்தனர்.

Comments