மீள அங்குரார்ப்பணம் செய்யப்படும் கல்கிஸ்சை | தினகரன் வாரமஞ்சரி

மீள அங்குரார்ப்பணம் செய்யப்படும் கல்கிஸ்சை

இலங்கையில் முன்னணி ஆடை அலங்கார தளமான Glitz அண்மையில் இயற்கையின் நாகரீக பொழிவு எனும் (Fashioned by Nature) தொனியில் தனது காட்சியறையினை மீள் அங்குரார்ப்பணம் செய்தது. எமது தேசத்தின் பசுமை அழகினை இந்த காட்சியறை பிரதிபலிப்பு செய்கின்றது. கல்கிஸ்சையில் புதிதாக புதுப்பொலிவு பெற்ற இந்த காட்சியறையானது நலன்விரும்பிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்காக அண்மையில் மீள்திறக்கப்பட்டது.

எந்தவொரு வைபவத்திற்கும், தனிநபருக்கும் பொருந்தும் பரந்தளவான அலங்கார ஆடைகளின் வடிவமைப்புகளை வழங்கும் வகையில் Glitz விரிவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலதரப்பட்ட நவநாகரீக ஆடைகள் மற்றும் வீட்டுப்பாவனை பொருட்களையும் இங்கு கொள்வனவு செய்யலாம். புதிய காட்சியறை இரண்டு வாகன தரிப்பிடங்கள், தன்னியக்க கொடுப்பனவு சேவைகள் மற்றும் உணவகம் ஒன்றை தன்வசம் கொண்டுள்ளது.

Glitz சந்தைப்படுத்தல் முகாமையாளர் ரனீஸ் ஷெரீப் கருத்து கூறுகையில் வாழ்க்கைப்பாணிக்கான தனிநபர் கொள்வனவு அனுபவத்தை வழங்கும் எண்ணக்கருவிற்கு அமைய Glitz வணிகநாமம் அறிமுகமாகியது. எமது வணிகநாமத்துடன் விசுவாசமாக இணைந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் வசதியான ஷொப்பிங் சூழல் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டு தரமான விற்பனைபொருட்கள், புதிய நவநாகரீகம் மற்றும் பணத்திற்கு பெறுமதி எனும் எமது வணிகநாம வாக்குறுதிக்கு உண்மையாக திகழ்கின்றோம் என தெரிவித்தார்.

கொள்வனவாளர்களுக்கு தெரிவு செய்ய எண்ணற்ற தெரிவுகள் கொண்டதாக புதிய Glitz கல்கிஸ்சை காட்சியறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சாதாரண வகை ஆடைகள், வைபவ ஆடைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆடைகள் என பலதரப்பட்ட நவநாகரீக ஆடை ஆபரணங்களை தெரிவு செய்யலாம். புதிய காட்சியறையில் சொந்த வணிக நாமங்களாக காணப்படும் Huff & Dee, Pink Elephant, NLM, MBRK மற்றும் Deedatஆகிய வணிக நாமங்களின் விரிவாக்கம் செய்யப்பட்ட தெரிவையும் காணலாம்.

இவற்றுக்கு மேலதிகமாக, சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி புதிய கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பெற்றோர் மற்றும் சிறுவர்களின் ஷொப்பிங் அனுபவத்தை வசதியாகவும், பாதுகாப்பாகவும் பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கின்றது.

Comments