20 TVS ஸ்கூட்டிகள்! | தினகரன் வாரமஞ்சரி

20 TVS ஸ்கூட்டிகள்!

இலங்கையின் மிகவும் விரும்பத்தக்க தேயிலை வகைகளில் ஒன்றான கொட்டகல கஹட்ட, அதன் வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டமான ‘கொட்டகல கஹட்ட ரச வாசனா’ திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது. இதன் மூலம் வெற்றியாளர்களுக்கு 20 TVS ஸ்கூட்டி பெப்களைப் பெற்றுக் கொடுக்கிறது. இந்த ஊக்குவிப்புத் திட்டமானது, 2018 ஜுன் 07 முதல் 2018 ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை இடம்பெறும்.

வாடிக்கையாளர்கள், தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவற்றுடன், கொட்டகல கஹட்ட தேயிலையின் மேலுறைகளையும் இணைத்து, ‘கொட்டகல கஹட்ட வாசனா’, த.பெ. இல. 161, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து போட்டியில் கலந்து கொள்ள முடியும். மேலும், குறித்த காலப்பகுதியில், கொட்டகல கஹட்ட ஊக்குவிப்பு அதிகாரிகள், நாட்டின் 20 மாவட்டங்களில் 110 நகரங்களைச் சென்றடைவார்கள். வாடிக்கையாளர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்த வாகனங்களில் வருவோரிடமும் கையளிக்க முடியும். இது அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க மேலும் இலகுவான வழிமுறையாகும்.

2012 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கொட்டகல கஹட்ட, துரித வளர்ச்சியின் மூலம் தற்போது சந்தையில் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது. இலங்கை தேயிலையின் அதியுயர்ந்த தரம் மற்றும் குணாதிசயங்களை சிறந்த முறையில் இது பெற்றுத் தருகிறது.

FMCG பிரிவின், ஸ்கான் உற்பத்திகளில் ஓர் உயர்மட்ட தயாரிப்பாக கொட்டகல கஹட்ட விளங்கி வருகிறது. இது, உயர்தர தேயிலையின் சுவையையும், நறுமணத்தையும் பெற்றுத் தருகிறது.

Comments