உடன்படிக்கையில் OPPO கைச்சாத்து | தினகரன் வாரமஞ்சரி

உடன்படிக்கையில் OPPO கைச்சாத்து

OPPO அடுத்த தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்களில் இரட்டை ​ெகமரா தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதற்காக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Corephotonics உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இதன் பிரகாரம், OPPO இனால் Corephotonics உடன் இணைந்து, தனது ஸ்மார்ட்ஃபோன்களுக்கான ​ெகமரா கட்டமைப்புக்கு அவசியமான high optical zoom factors, accurate depth mapping, ultra-fast digital bokeh மற்றும் இதர மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்கள் போன்றன optics, mechanics, computational photography போன்றவற்றுடன் தொடர்புடைய புத்தாக்கங்களை வழங்குவதாக அமைந்திருக்கும்.

இதன் பிரதான குறிக்கோளாக மொபைல் புகைப்படக்கலை அமைந்துள்ளது. Corephotonics போன்ற முன்னணி விநியோகத்தர்களுடன் கைகோர்த்து உறுதியான பங்காண்மைகளை ஏற்படுத்திக் கொள்ள கவனம் செலுத்தி வருகிறோம். Corephotonics இன் பரந்த வடிவமைப்பிலான இரட்டை ​ெகமராக்கள் மற்றும் டெலிபோடோ லென்ஸ்கள் ஆகியவற்றுடன் periscope-style கட்டமைப்பு, optical image stabilization மற்றும் image fusion தொழில்நுட்பம் போன்றன மொபைல் புகைப்படக் கலையை மேலும் டிஜிட்டல் கெமராக்களின் திறனை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும் என OPPO ஹார்ட்வெயர் பணிப்பாளர் கலாநிதி கிங் தெரிவித்தார்.

Corephotonics இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் டேவிட் மென்ட்லொவிக் கருத்துத் தெரிவிக்கையில், OPPO தன்வசம் மிகவும் கவனயீர்ப்பான பதிவை ஸ்மார்ட்ஃபோன் புகைப்படங்கள் புத்தாக்கத்தில் கொண்டுள்ளது.

OPPO அணிகளுடன் அவர்களின் அடுத்த தலைமுறை கெமரா தொழில்நுட்பங்களுக்காக நெருக்கமாக பணியாற்றுவதையிட்டு நாம் பெருமையடைகிறோம். எமது கெமரா வடிவமைப்புகள் மற்றும் புகைப்பட செம்மையாக்கங்கள் போன்றன எதிர்கால கையடக்க தொலைபேசி புகைப்படக் கலையில் கொண்டுள்ள பெருமளவான அனுகூலங்களை இந்த மூலோபாய உடன்படிக்கைகள் புலப்படுத்துகின்றன என்றார்.

Comments