மீண்டும் AA+ (lka)Fitch தரப்படுத்தலை பெற்றுள்ள ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் AA+ (lka)Fitch தரப்படுத்தலை பெற்றுள்ள ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ்

நிதியியல் பலம் மற்றும் உறுதியான வெளித்தோற்றத்துடன் AA+ (lka)என்ற தேசிய நீண்டகால தரப்படுத்தலுடன் Fitch Ratings London, இடமிருந்து தரப்படுத்தலைப் பெற்ற முதலாவது மற்றும் ஒரேயொரு உள்நாட்டு காப்புறுதி நிறுவனம் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் நிறுவனமாகும்.

ஆயுள் காப்புறுதிநிதியம் ரூபா 100 பில்லியனை எட்டியுள்ளதுடன், தொழிற்துறையில் அதியுச்ச தொகையாகவும் காணப்படுகின்றது

முன்னணி அரச காப்புறுதி நிறுவனமான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ், நிறுவனத்தின் நீண்டகால நிதியியல் நிலைபேற்றியலுக்காக மீண்டும் 'AA+ (lka)' என்ற தரப்படுத்தலை Fitch இடமிருந்து அது பெற்றுள்ளது. நாட்டில் காப்புறுதித் தொழிற்துறையில் முன்னோடியான ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ், 1962 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அன்று முதல் போட்டியாளர்களை விடவும் முன்னிலையிலும், காலத்திற்கு ஏற்ற வகையிலும் திகழ்ந்து வந்துள்ளது. ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஆயுள் காப்புறுதிநிதியானது உள்நாட்டு காப்புறுதித் துறையில் இன்றைய திகதி வரையில் அதிகூடிய ஆயுள் நிதியாகக் காணப்படுவதுடன், ரூபா 100 பில்லியன் என்ற இலக்கினை எட்டியுள்ளது. எத்தனையோ விருதுகளை அள்ளிக் குவித்துள்ள இந்த வர்த்தக நாமத்திற்கு அண்மையில் நாட்டிலுள்ள மிகவும் நேசிக்கப்படுகின்ற காப்புறுதி வர்த்தக நாமம்’ என்ற இனங்காணல் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள 2018 Brands Annual பதிப்பில் இலங்கையில் முதல் ஐந்து ஸ்தானங்களிலுள்ள மிகவும் நேசிக்கப்படுகின்ற வர்த்தக நாமங்களுள் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. கையில் மொபைல் பயன்பாடு (Mobile Application) ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கு இந்நிறுவனம் தயாராகி வருகின்றது. நடைமுறைகளை மேலும் திறன் கொண்டதாக மாற்றியமைப்பதற்காக தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் நோக்குடன் கணிசமான அளவில் அது முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

1962 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கையில் அரசாங்கஉடமையின் கீழான அதிபாரிய காப்புறுதி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன், ரூபா 193 பில்லியனுக்கும் அதிகமான சொத்து முகாமைத்துவத் தளத்தையும், ரூபா 1005 பில்லியன் ஆயுள் நிதியையும் கொண்டுள்ளதுடன், உள்நாட்டு காப்புறுதித் துறையில் அதிபாரிய தொகையாகவும் இது காணப்படுகின்றது.

Comments