யூனியன் வங்கி கடன் அட்டைகளுடன் பெருமளவு சலுகைகள் | தினகரன் வாரமஞ்சரி

யூனியன் வங்கி கடன் அட்டைகளுடன் பெருமளவு சலுகைகள்

உள்ளம்சத்துடன் இந்த அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் வங்கியியல் தீர்வுகளில் பரந்தளவு அனுகூலங்களையும் வழங்குகிறது. யூனியன் வங்கியின் கடன் அட்டைகள் அறிமுகத்துடன், வங்கியின் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிக்கும் செயன்முறை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் சகல நிதியியல் தேவைகளையும் ஒரு கூரையின் கீழ் நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வசதி வழங்கப்படும்.

யூனியன் வங்கி மூன்று கடன் அட்டைத் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. கோல்ட், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகியன இதில் அடங்குகின்றன. வாடிக்கையாளர் வகைப்படுத்தலுக்கமைய, இந்த அட்டைகளும் அந்த பிரிவுகளின் தேவைகளுக்கமைய வடிவமைக்கப்பட்டுள்ளன.

வங்கியின் ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அட்டையை வழங்கும் என்பதுடன், பரந்தளவு அனுகூலங்கள், சலுகைகள் மற்றும் பிரத்தியேகமான அம்சங்களுடன் ஏனையவர்களுக்கு வழங்கும்.

யூனியன் வங்கியினால் வழங்கப்படும் சகல கடன் அட்டைகளும் ‘VISA Paywave’ அம்சத்தை கொண்டுள்ளது. இதனூடாக துறையில் காணப்படும் பெறுமதி வாய்ந்த அட்டைகளில் ஒன்றாக இந்த அட்டையை திகழச் செய்யும்.

துறையில் பின்பற்றப்படும் டிஜிட்டல் மாற்றத்துக்கமைய இந்த அம்ச அறிமுகமும் அமைந்துள்ளது. ஏனைய அட்டை உரிமையாளர்களுக்கு வேகமாக தமது கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

போட்டிகரமான வட்டி வீதங்களுடன் கடன் அட்டை வழங்கப்படுவதுடன், உயர் வாழ்க்கைத்தர அனுகூலங்களையும் வெகுமதிகளையும் வழங்குகிறது.

பரந்தளவு வாடிக்கையாளர்களின் வெவ்வேறு தேவைகளை இனங்கண்டு, யூனியன் வங்கி கடனட்டைகள் வருடம் முழுவதும் பெருமளவு அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் பெறுமதி வாய்ந்த சேமிப்புகளையும் வாழ்க்கையை மேம்படுத்தும் அனுபவங்களையும் வழங்குகிறது.

Comments