ஹேலீஸ் குழும வருமானம் ரூபா 50 பில்லியன் | தினகரன் வாரமஞ்சரி

ஹேலீஸ் குழும வருமானம் ரூபா 50 பில்லியன்

பல்வேறுபட்ட வணிகத்துறை குழுமத்தின் முன்னணியில் இருக்கும் ஹேலீஸ் பி.எல்.சி 2018 வருடத்தில் ஜுன் 30ம் திகதியுடன் நிறைவடைந்த முதலாம் காலாண்டுக்காக ரூபா 50 பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 74% பாரிய வளர்ச்சியாகும். வியாபார குழுமத்தின் அனைத்து பிரதான வர்த்தக துறையின் பங்களிப்பு இந்த வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குகின்றது.

ஹேலீஸ் குழுமம் தனது 2019 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் கைப்பற்றிய அதிக வருமானத்தில் பாவனையாளர் மற்றும் சில்லறை வர்த்தகம், கப்பற் பொருட் போக்குவரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் மேற்கொண்ட மேம்பாடுகள் முக்கிய காரணங்களாகும். பாவனையாளர் மற்றும் சில்லறை வர்த்தக துறையில் கடந்த நிதியாண்டின் முதலாவது காலாடில் ரூபா 1.2 பில்லியன் வருமானத்தை பெற்றதுடன் இது இந்த காலாண்டில் அதிக வளர்ச்சியை வெளிப்படுத்தி ரூபா 16.6 பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளது. இதற்கு பிரதான காரணமாக 2018ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஹேலீஸ் குழுமமானது சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர் அதன் பங்களிப்பு முக்கியமானது. சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் 2019 நிதியாண்டுக்காக ரூபா 1.3 பில்லியன் வருமானத்தை வழங்கியுள்ளது.

இந்த நிதியாண்டில் முதலாவது காலண்டில் குழுமத்தின் பொருட் போக்குவரத்து மற்றும் கப்பற் சேவை சார்ந்த பிரிவானது ரூபா 10.6 பில்லியன் வருமானத்தை குழுமத்துக்கு வழங்கியுள்து. இது கடந்த நிதியாண்டின் முதலாவது காலண்டில் ரூபா 7.2 பில்லியனாக காணப்பட்டது. இந்த வருமானத்துக்கு முக்கிய காரணமாக குழுமம் அண்மையில் மேற்கொண்ட கையகப்படுத்தல்களின் பங்களிப்பை குறிப்பிடலாம். பொருட் போக்குவரத்து மற்றும் கப்பற் சேவை வர்த்தக பிரிவின் செயற்பாட்டு இலாபம் ரூபா 663 மில்லியன் என்பதுடன் அது கடந்த நிதியாண்டின் முதலாவது காலண்டில் அது ரூபா 431 மில்லியன் ஆகப் பதிவாகியிருந்தது.

Comments