கைபேசி”க் காதல் | தினகரன் வாரமஞ்சரி

கைபேசி”க் காதல்

கண்ணடித்து

காதல் செய்யும் காலம் மாறி

கையடக்க தொலை பேசியில்

காதல் செய்யும் காலமிது.

* * *

ஆணும், பெண்ணும்

அருகருகே இருப்பது போல்

அதில் அங்கே உரையாடல்

ஆகா ஆனந்தம் ‘கைபேசி’க் காதலில்

* * *

தோற்றத்தைக் கண்டு

தொடர்பை ஏற்படுத்தி

தொல்லையில் மாட்டுவதா?

தொடர்பை நிறுத்துங்கள்

* * *

தொலை பேசி

தொல்லை தரும்

தொட்டுச் சொல்கிறேன்

தொடராதீர்கள் பேச்சை.

Comments