செப்டம்பர் 14 முதல் 16 வரை BMICH இல் | தினகரன் வாரமஞ்சரி

செப்டம்பர் 14 முதல் 16 வரை BMICH இல்

இலங்கை பொதி செய்தல் நிறுவனம் 'LANKAPAK 2018' என்ற பொதி செய்தல் மற்றும் அச்சிடல் தொடர்பான மூன்று நாள் கண்காட்சியை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடத்தவுள்ளது.

இந்த மூன்றுநாள் பொதி செய்தல் மற்றும் அச்சிடல் கண்காட்சி கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சிக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஊடக மாநாடு அண்மையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இம்மாநாடு வர்த்தக, வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதுர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இம்முறை கண்காட்சியில் 150க்கு மேற்பட்ட கண்காட்சியாளர்கள் புதிய உற்பத்திகள் மற்றும் பிந்திய தொழில்நுட்ப புதுமைகள் அடங்கிய கண்காட்சி நடப்பதை உறுதி செய்துள்ளனர்.

பொதி செய்தல் நிறுவனங்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றி இந்த கண்காட்சியின் போது விளக்கம் அளிக்கும் வகையில் பல பேச்சாளர்கள் இந்த கண்காட்சியில் உரையாற்றவுள்ளனர். அதே நேரம் பார்வையாளர்களுக்கு இந்த கண்காட்சியின் போது பொதியிடல் கைத்தொழில் பற்றி பரந்த அறிவும் புதுவகையாக ஊக்குவிப்பு ஆகியவையும் கிடைக்கும் என்று 'லங்கா பெக் 2018' ஏற்பாட்டாளர்கள் உறுதி கூறுகின்றனர்.

Comments