செயற்றிறனுக்கான அங்கீகாரம்: SDB வங்கிக்கு விருது | தினகரன் வாரமஞ்சரி

செயற்றிறனுக்கான அங்கீகாரம்: SDB வங்கிக்கு விருது

நாட்டின், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான (MSME) தொழில்முனைவாண்மைகளின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, MSME துறையை மேம்படுத்துவதற்காக ஆற்றிய பெறுமதிமிக்க பங்களிப்புக்காக SDB வங்கி “இலங்கையில் விரைவாக அபிவிருத்தியடையும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கி” எனும் விருதை ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட Global Banking and Finance Review சஞ்சிகை மூலம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதானது SDB வங்கி கடந்த காலங்களில் வென்ற விருதுகளின் வரிசையுடன் இணைந்து, தற்போதைய வங்கியியல் துறையில் அதன் வளர்ச்சியைப் பறைசாற்றும் முக்கிய அம்சமாகவும் உள்ளது. கடந்த வருடம் “ஏசியா சிக்யுரிட்டீஸ்” அதனறிக்கையில், கூட்டுறவுத் துறைகளுக்கு தனது வங்கிச் சேவையை விஸ்தரித்ததன் மூலம், SDB வங்கியானது சேமிப்புப் பழக்கமற்ற கிராயமிப் பகுதிகளுக்கும் தனது சேவையை விஸ்தரித்திருந்தமையைப் பாராட்டிள்ளது. அவ்வறிக்கையானது, ஒவ்வொரு கிளையிலும் ஆகக் குறைந்த செயற்பாட்டுச் செலவினத்தை பேணுவதையும், ஓய்வுபெற்ற அரச அலுவலர்கள் மற்றும் MSMEக்களை இலக்கு வைக்கும் அதன் பாரம்பரியமற்ற வங்கியியல் மாதிரிகளையும் பாராட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் விசேட அனுமதிப்பத்திரம் பெற்ற SDB வங்கியானது, MSME துறையில் நிலைபேண் தன்மையைப் பேணுவதனால் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கான முதுகெலும்பாக இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே SDBயானது 2016 மற்றும் 2017 நிதியாண்டுகளில் 54,000 க்கும் அதிகமான கடன்களை வழங்கிள்ளது. தற்போது இந்த முக்கிய துறையின் ஊடாகக் கையளிக்கப்பட்ட நிதியின் பெறுமதியானது அண்ணளவாக 20 பில்லியன் ரூபாவாக உள்ளது.

அதேவேளை வங்கியானது கூட்டுறவு வர்த்தகத்தை விவசாயம், பாலுற்பத்தி, ஆடைத்தொழிற்சாலை, மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் MSMEக்களாக விருத்தி செய்வதிலும் ஈடிணைற்ற பங்களிப்பினை வழங்கியுள்ளது. இது கூட்டுறவுத்துறையையும் MSMEக்களையும் நிதிசார் அறிவினைப் பெருக்கிய வண்ணம் துரித தொழில்நுட்ப வளர்ச்சியால் உலக வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், மாற்றம் காணும் புவிசார் அரசில் மற்றும் சிராக்கல் சூழல் என்பனவற்றால், ஆளுமை விருத்தி மற்றும் மேம்பாடு என்பனவற்றில் உள்ள வளத்திட்டமிடல்கள் முகாமைத்துவ சவால்கள் பற்றிய தகவல்களைப்பெற்ற வண்ணம் வளர்ச்சி காண்பதற்கு உதவுகின்றது.

SDBயானது அதன் தொலைநோக்குக்கு அமைய, கூட்டுறவு சங்க வலையமைப்புகள் ஊடான இலகுவான நிதி அணுக்கத்துக்காக கூட்டுறவுத்துறைகளுக்கு உதவி புரிந்து அவை MSMEக்களாக வளர்ச்சியடைய உதவுகின்றது.

SDBயானது சுமார் 3,800 சங்கங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதால், தனித்துவமான மற்றும் இலகுவான நிதிசார் தீர்வுகளையும் வழங்கக் கூடியதாகவுள்ளது. அவை தனிநபர்களாக அல்லது கூட்டுறவு நிறுவனங்களாக இருந்தாலென்ன நிதித் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

SDB வங்கியின் பொது முகாமையாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி நிமல் சீ. ஹப்புஆராச்சி கருத்துக் கூறுகையில், “வங்கிச் சேவைகளை நாடாத கிராமப்புறங்களை இலக்கு வைத்து சணச அபிவிருத்தி வங்கி ஆரம்பத்தில் செயற்பட்டாலும், அது நுண் நிதிசார் பிரிவுகளை இலக்கு வைத்தவாறே, MSME பிரிவில் தன்னை நிலைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவாண்மைகளில் கவனத்தைக் குவித்தவாறே சில்லறை கடன் வழங்கலில் ஈடுபடுகின்றது.

அத்துடன் இலங்கையில் சிறிய வியாபாரத்துறைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், பட்டதாரிகள், மற்றும் பெண் தொழில் முனைவாளர்கள் ஆகியோருக்கும் இக்கடன்களை வழங்குகின்றது. பெண் தொழில்முனைவாளர்களுக்கு “உத்தமி” எனும் கடன்வழங்கல் திட்டத்தின் மூலம் அவர்களை நிதிசார் சுதந்திரமுடைவர்களாக நாட்டின் பொருளாதாரத்தில் வினைத்திறன் மிக்க பங்களிப்பினைச் செய்யக் கூடியவர்களாக மாற்றியுள்ளது.

Comments