“2018ம் ஆண்டின் தன்னிகரற்ற தெரிவுகள் ODEL இல்” | தினகரன் வாரமஞ்சரி

“2018ம் ஆண்டின் தன்னிகரற்ற தெரிவுகள் ODEL இல்”

வசீகரிக்கும், கவர்ச்சியான, புதுப்பொலிவுடன் கூடிய நவநாகரிக ஆடை அணிகலன்களை தன்னகத்தே தாங்கிய நவநாகரிகத்தின் உறைவிடமாக ODEL (ஒடெல்) நிறுவனம் தன்னை நிறுவியுள்ளது. ஒரு நெரிசல் மிக்க நகர்ப்பகுதியில் ஹிமாலய சாரலில் சுற்றித்திரியும் ஒரு அனுபவத்தைத் தருவதாகவும், மலைச்சாரலில் உள்ள வண்ணங்களை பொறுக்கி எடுக்கும் விதமாகவும், தனது செழுமை மிக்க பிரத்தியேக கலாசாரம் மற்றும் வடிவங்கள் மூலம் எதிர்பார்ப்புக்களை மிஞ்சி ஆத்மாவை பரவசப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

இயற்கையோடு எம்மை மீள் இணைக்கக்கூடிய வசீகரமான வடிவமைப்பாளர்களான Gurung, Phillip Lim, Etro, Missoni, மற்றும் Simone Rocha போன்றவவர்களின் வடிவமைப்புத் தொகுதியை உள்ளடக்கியதாக ODEL FALL COLLECTION காணப்படுகின்றது.

ODEL FALL COLLECTION இல் உள்ள ஆடை, அணிகலன்கள் இயற்கையைப் பிரதிபலிக்கக்கூடிய வண்ணங்களையும், பன்முகத்தன்மையையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவை பாரம்பரிய மரபுகளை பேணி வடிவமைக்கப்பட்டவையாகவும் நெய்தல் அலங்காரங்களில் கவனம் செலுத்தி தயாரிக்கப்பட்ட கைவண்ணத்தின் புதிய அலைகளை உருவாக்கும் விதமாகவும் அமைந்துள்ளன.

பாரம்பர்ய சதுர வடிவங்கள், திபெத்திய ஓவியங்கள், டவீட் வடிவங்கள் கண்கவர் தோற்றம் கொண்ட சால்வைகள், பெஸ்லே (Paisley) ஓவியங்கள் என்பன இத்தன்னிகரற்ற நிலையத்தின் மையப் பகுதியில் இடம்பிடித்துள்ளன. இவை ODEL (ஒடெல்) நிறுவனத்தின் பிரத்தியேக தரத்தை வெளிப்படுத்துபவையாகவும் கலந்து பொருத்தும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றன. உங்கள் விருப்பத்திற்குரிய ODEL காட்சியறையில் பன்முகப்படுத்தப்பட்ட போக்குகளைக் கொண்ட தெரிவுகள் வைக்கப்பட்டுள்ளன.

Comments