ikman.lk இன் ‘Holidays’ சலுகைகளுடன் Buy Now கட்டமைப்பு விஸ்தரிப்பு | தினகரன் வாரமஞ்சரி

ikman.lk இன் ‘Holidays’ சலுகைகளுடன் Buy Now கட்டமைப்பு விஸ்தரிப்பு

இலங்கையின் மாபெரும் ஒன்லைன் சந்தைப்பகுதியான ikman.lk தனது Buy Now கட்டமைப்பை விஸ்தரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் கவர்ச்சிகரமான ஹோட்டல் சலுகைகள் புதிதாக உருவாக்கப்பட்ட ikman Holidays’ சேவைகள் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது ikman.lk வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விடுமுறைச் சலுகைகளுடன் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.

முன்னணி ரிசோட்கள், பொட்டிக் ஹோட்டல்கள் மற்றும் பங்களாக்கள் போன்றவற்றுடன் ikman.lk கைகோர்த்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் கவர்ச்சிகரமான ஹோட்டல் தங்குமிட வசதிகளை பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது. இலங்கை ஹோட்டல் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த மற்றும் சிட்ரஸ் லெய்ஷர் பிஎல்சி ஆகியவற்றின் ஹோட்டல்கள் தற்போது ikman.lk வாடிக்கையாளர்களுக்கு விசேட கட்டணங்களை வழங்குகின்றன. இலங்கையர்களுக்கு மாத்திரம் 25 - -முதல் 50 வீதம் வரையான விலைக்கழிவு இந்த ஹோட்டல்களில் வழங்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் தமக்கு வேண்டிய ஹோட்டல் ஒன்றைத் தெரிவுசெய்து, அந்த நாட்களை உறுதிசெய்த பின், தமக்குரிய பதிவை மேற்கொள்ள வேண்டும். கொள்வனவு செய்யப்பட்ட ஹோட்டல் வவுச்சர்கள் விடுமுறை சலுகைகளைக் கொண்டிருக்கும் என்பதுடன், தெரிவுசெய்த ஹோட்டலுடன் ikman.lk தொடர்பை ஏற்படுத்தி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மீள உறுதிசெய்யும்.

தனது நிபுணத்துவ வணிக e- கட்டமைப்பை மேலும் உறுதிசெய்யும் வகையில், ikman.lk தனது Buy Now சேவையை மேம்படுத்தியுள்ளது. இதனூடாக கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் சொப்பிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலான பல புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கியுள்ளது.

சர்வதேச வர்த்தக நாமங்களுக்கு பிரவுண் அன்ட் கம்பனியின் உத்தரவாதம் மற்றும் வலுச்சாதனங்கள், ஹார்ட்வெயார் மற்றும் கட்டிட மூலப் பொருட்களுக்கு பிரசித்திபெற்ற பாமன்கட குரூப் ஆகியவற்றின் பொருட்கள் மற்றும் சேவைகள், பிரவுண்ஸ் டீல்ஸ் போன்றவற்றுடன் இணைந்து ikman.lk தனது Buy Now கட்டமைப்பை விஸ்தரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தற்போது இந்த விற்பனையாளர்களிடமிருந்து 10-25வீத விலைக்கழிவை பெற்றுக்கொள்ளலாம்.

Comments