Knorr சமையல் நிபுணருக்கு விருது | தினகரன் வாரமஞ்சரி

Knorr சமையல் நிபுணருக்கு விருது

Knorr இன் சமையல்கலை நிபுணரான சதுரிகாவுக்கு இந்த ஆண்டின் சிறந்த பெண் தலைமைத்துவ சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை பெண்கள் தலைமைத்துவ விருதுகள் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதை பெற்றுக் கொண்டமையானது, சதுரிகாவுக்கு தனிப்பட்ட வகையிலும், அவர் கைகோர்த்துள்ள வர்த்தக நாமமான Knorr க்கும் பெருமை சேர்த்திடும் வகையிலும் அமைந்துள்ளது.

இலங்கை பெண்கள் தலைமைத்துவ விருதுகள் என்பது எதிர்காலத்தை நோக்காக கொண்டும் மற்றும் பிராந்தியமட்டத்திலும் பெண்கள் வகிக்கும் தலைமைத்துவ நிலை மற்றும் தீர்மானமெடுத்தல்கள் போன்ற செயற்பாடுகளை கெளரவிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், தேசிய மற்றும் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களில் சிறந்த பெறுபேறுகளை எய்துவதற்கு ஊக்கமான, புத்தாக்கமான மற்றும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்துவோரை கெளரவிப்பதாகவும் அமைந்துள்ளது. இந்த விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படுவது இலகுவான காரியமன்று.

சமையல் நிபுணரான சதுரிகா Win-Stone School of Culinary Art இல் தகைமை பெற்ற சமையல் கலை நிபுணராக திகழ்வதுடன், சமையல் துறையில் 10 வருடங்களுக்கு மேலான அனுபவத்தையும் கொண்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் வேலைச்சுமை நிறைந்த தாய்மாரின் செளகரியம் கருதி இலகுவாக மற்றும் செளகரியமாக பயன்படுத்தக்கூடிய Knorr தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு தாம் பயின்ற விடயங்களை பிரயோகித்திருந்தார்.

Comments