திருகோணமலையில் நேற்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் | தினகரன் வாரமஞ்சரி

திருகோணமலையில் நேற்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

 

திருகோணமலை பிரதேசத்தில் நேற்றுக் காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5 இற்கும் 3.8 இற்கும் இடைப்பட்டதாக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறினார்.

நேற்று அதிகாலை 12.35 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் , இந்த நில நடுக்கத்தால் பொதுமக்களுக்கோ, சொத்துக்களுக்கோ எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என சந்திரவிமல் சிறிவர்தன கூறினார்.

நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் இப் பகுதி மக்கள் பீதியடைந்திருந்தனர்.

திருகோணமலை நகர், கிண்ணியா, தோப்பூர், மூதூர், பகுதிகளில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது பாரிய சத்தம் கேட்டதாகவும் வீட்டின் கதவுகள், அலுமாரிகள் மற்றும் சுவர்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Comments