மர்ஹூம் அஷ்ரப்பின் 18 ஆவது நினைவு தினம் | தினகரன் வாரமஞ்சரி

மர்ஹூம் அஷ்ரப்பின் 18 ஆவது நினைவு தினம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடிவெள்ளியுமான மர்ஹூம் எம்.எச். எம். அஷ்ரபின் 18ஆவது நினைவு தினம் இன்று சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

அஷ்ரப் தொடர்பான நினைவுச் சொற்பொழிவை கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் எழுத்தாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா நிகழ்த்துவார்.

Comments