கட்டடத் துறையில் புதிய பரிமாணம்: அறிமுகப்படுத்துகின்றது சலசி லங்கா | தினகரன் வாரமஞ்சரி

கட்டடத் துறையில் புதிய பரிமாணம்: அறிமுகப்படுத்துகின்றது சலசி லங்கா

வெல் அன்ட் ஏபிள் லங்கா (தனியார்) நிறுவனம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து கட்டிட நிர்மாண மொன்றுடன் புதியதொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பமானது கட்டடங்கள் சூழல் நட்புறவுடனும், செலவு குறைந்ததாகவும், குறைவான காலத்தில் செய்து முடிக்கக் கூடியதாகவும், இலாபத்தை கூட்டவும், தரத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைவதற்கு பெரிதும் உதவும்.

சலசி லங்கா, 2017ஆம் ஆண்டு இலங்கையில் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் பிரபலமிக்க தேசிய நிர்மாண சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட நிறுவனமாகும். அந்த நிறுவனமானது 2000ஆம் ஆண்டு இக் கட்டட நிர்மாணத் துறையில் உலகளாவிய ரீதியில் 25 வருடங்களுக்கு மேற்பட்ட அங்கீகாரத்தை தொட்டுள்ள வெல் அன்ட் ஏபிள் சர்வதேச (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து மேற்படி புதிய தொழில்நுட்பத்தை இலங்கையில அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

வெல் அன்ட் ஏபிள் சர்வதேச (தனியார்) நிறுவனத்தின் சார்பில் அந்த நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிர்வாகப் பணிப்பாளருமான ரேமன்ட் வொங், சலசி லங்கா (தனியார்) நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாகப் பணிப்பாளர் யூ.ஏ.பாதுக்க ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த புதிய கட்டட நிர்மாண முறையான முன்னரே பொருத்தப்பட்ட நிர்மாண முறைமை எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் கட்டிட நிர்மாணத் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை. இந்த புதிய முறை பற்றி நீண்ட காலமாக நாம் ஆய்வு செய்து வந்திருக்கிறோம். அதையடுத்தே இந்த முறை எமக்கு சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம் என்று சலசி லங்கா (தனியார்) நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் யூ.ஏ.பாதுக்க கூறினார்.

அதேநேரம் வெல் அன்ட் ஏபிள் சர்வதேச (தனியார்) நிறுவனத்தின் ஸ்தாபகர் ரேமன்ட் வொங் பேசும்போது நிர்மாணத் துறையில் இலங்கை நிறுவனமொன்றுடன் இணைந்து செயற்படுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், இந்த இணைப்பு இலங்கையில் கட்டட நிர்மாணத் துறைக்கு மிகுந்த பயன்களை தரும் என்றும் குறிப்பிட்டார்.

Comments