Frankfurt நகரில் Ambiente வர்த்தக கண்காட்சி | தினகரன் வாரமஞ்சரி

Frankfurt நகரில் Ambiente வர்த்தக கண்காட்சி

Ambiente வர்த்தக கண்காட்சி ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதத்தில் ஜெர்மனியிலுள்ள Frankfurt நகரில் நடைபெறும் ஒரு சந்தைக் கண்காட்சியாகும். இக்கண்காட்சி எதிர்வரும் 2019 இல் பெப்ரவரி 8 முதல் 12 ஆம் திகதி வரை ஜெர்மனியின் Frankfurt நகரில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. 88 நாடுகளில் இருந்து 4376 கண்காட்சியாளர்கள் இந்த வர்த்தக சந்தையில் பங்குபற்றுகின்றனர்.

பாவனைப் பொருட்களுடன் வர்த்தகம் மற்றும் ஆக்கத்திறனும் இக்கண்காட்சியில் இணைந்து இடம்பெறுவது இதன் சிறப்பம்சமாகும். அத்துடன் வாழ்தல் கொடுத்தல் மற்றும் உணவருந்துதல் என மூன்று பிரிவுகளில் இக்கண்காட்சி அமைகிறது.

வாழ்தல் பிரிவில் வீட்டுக்கான சர்வதேச ஆலோசனைகள் புதிய டிசைன்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், வீட்டுக்குள்ளும் வெளியிலும் வைக்கத் தக்கதான அலங்கார பொருட்கள் பிரிவில் 1200 கண்காட்சியாளர்கள் இடம்பெறுகின்றனர்.

கொடுத்தல் பிரிவில் கைப்பணிப்பொருட்கள், சணலினால் ஆன பொருட்கள், காகிதாதிகள், ஆபரணங்கள் ஆகியன இடம்பெறுகின்றன. இப்பிரிவில் ஆயிரம் கண்காட்சியாளர்கள் இடம்பெறுகின்றனர்.

உணவருந்தல் பிரிவில் சமையலுக்கான பொருட்கள், பீங்கான் மற்றும் கிளாஸ் வகைகள் இடம்பெறுகின்றன. இப்பிரிவில் 22000 கண்காட்சியாளர்கள் பங்கு பற்றுகின்றனர்.

இந்த வர்த்தக கண்காட்சியில் இலங்கையில் இருந்து ஐந்து கண்காட்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர். தங்கொட்டுவ, சேலின், கொஸ்பஸ் ஹவுஸ் கைப்பணி, ஏ.எம்.பி. சிலோன் மற்றும் ஆர்ட் டெகரேசன் ஆகிய நிறுவனங்கள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும். அத்துடன், இந்த கண்காட்சியை பார்வையிட இலங்கையிலிருந்து பல வர்த்தகர்கள் ஜெர்மனிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

167 நாடுகளிலிருந்து ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் இக்கண்காட்சியை பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கண்காட்சி தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.

Frankfurt தொகுதியின் பாவனையாளர் பொருட்கள் மற்றும் Ambiente கண்காட்சியின் பணிப்பாளர் சபையின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஸ்டீபன் குர்ஷாவ்ஸ்கி மற்றும் கண்காட்சியின் சந்தை தொடர்பாடல் பிரிவில் பணிப்பாளர் எர்ட்மன் கிலியன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு கண்காட்சி பற்றி விளக்கமளித்தனர்.

Comments