காட்டுயானைகளின் அட்டகாசமும் மக்களின் திண்டாட்டமும்! | தினகரன் வாரமஞ்சரி

காட்டுயானைகளின் அட்டகாசமும் மக்களின் திண்டாட்டமும்!

வனஜீவராசிகள் திணைக்களம் இன்னும் முனைப்புடன் செயற்பட்டாக வேண்டும்

உலகில் மிகவும் ஞாபகசக்தி கொண்ட விலங்காகவும், அதிக ஆண்டுகள் உயிர் வாழும் உயிரினமாகவும் யானை காணப்படுகின்றது. யானையை கரி,போதகம், களிறு, அரி என பலபெயர்கள் கொண்டு அழைக்கின்றோம். இந்த யானையின் முத்துக்கள், யானைத்தந்தங்கள் அதிகவிலை கொடுத்து வாங்கும் பொருளாகவும் விளங்குகிறது. இதே சமயம் யானைத் தாக்கி எமது நாட்டில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. யானை மனிதனை கொன்று உயிரிழக்கச் செய்யும். ஆனால் யானையை மனிதன் கொல்லுவதோ அல்லது காயப்படுத்தி துன்புறுத்தவோ நாட்டிலுள்ள சட்டத்தில் இடமில்லை. ஆரம்பகாலத்தில் மனிதன் யானையை வேட்டையாடியதோடு, அதனை பழக்கப்படுத்திக் கொண்டு யானையின் பலத்தினால் நிறைய வேலைகளையும் செய்து கொண்டான். காட்டு யானையை பழக்கி வளர்த்தவர்கள் அதை முறையாக பராமரிக்க முடியாமல் காட்டில் கொண்டு விட்டு விடவும் செய்கிறார்கள். மனிதனுடன் பழகிய இத்தகைய யாணைகள் மனிதனைத் தேடியும், மதம் பிடித்தும் பொதுமக்களின் இருப்பிடங்களை நாடி நுழை வதாகவும் கூறப்படுகிறது.

எமது நாட்டில் யானைக்கும், மனிதர்களுக்கும் இடையிலான சண்டை இன்னமும் ஓயவில்லை. இவ்வாறான போராட்டம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், லகூகல, சாகமம், கஞ்சிகுடிச்சாறு, திருக்கோயில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நாவிதன்வெளி, கல்முனை, காரைதீவு, இறக்காமம், தெஹியத்தகண்டி, உகனை, ஹிங்குரானை போன்ற பகுதிகளிலும், திருகோணமலை மாவட்டத்தில் வெருகல், கந்தளாய், மூதூர், மொறவெவ, வெருகல், சேருநுவர போன்ற பகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை,வவுணதீவு, செங்கலடி, வாகரை, கிரான், ஓட்டமாவடி போன்ற இடங்களில் யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் வந்து பொதுமக்களை அடித்துக் கொல்கின்றது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கணிப்பீட்டின் அடிப்படையில் 7500 யானைகள் நாட்டில் உள்ளன. இவ்வாறான யானைகளில் அதிகமான யானைகள் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றன. இலங்கையின் பௌத்த மதச்சின்னமாக யானைகள் இருப்பதுடன் பாராளுமன்ற சட்டத்தில் யானைகளுக்கென்றே தனிச்சட்டம் இயற்றப்பட்டு யானைகள் சட்டரீதியாக பாதுகாக்கப்படுகின்றன.

கடந்த 5 வருடங்களில் இதுவரையும் 1200 யானைகள் கிராமவாசிகளினால் கொல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. யானைகளை கொல்வது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் குறிப்பிடுகின்றது. காட்டுயானைகள் பொதுமக்களின் இருப்பிடங்களை நோக்கியும், விவசாயக் காணிகளுக்குள்ளும் நுழைந்து பாரிய சேதங்களை ஏற்படுத்துவதனாலேயே யானைக்கும், மனிதர்களுக்குமிடையில் போராட்டம் வெடிக்கின்றது.

இதன் காரணமாக யானைகள் நஞ்சூட்டப்பட்டும், சுடப்படுவதும் நிகழ்கிறது. ரயில் போக்குவரத்து பாதைகளுக்கு அண்மையில் நடமாடும் யானைகள் ரயில்மோதி இறக்கின்றன.

எமது நாட்டில் கடந்த 5 வருடங்களில் காட்டுயானைகள் தாக்கி 375 பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். கடந்த 5 வருடங்களில் எமது நாட்டில் 5800 சம்பவங்கள் யானையுடன் தொடர்புபட்வை.

மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் கோறளைப்பற்று வடக்கு (வாகரை), கோரளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்பற்று (செங்கலடி), மண்முனை மேற்கு (வவுணதீவு), மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை), போரதீப்பற்று (வெல்லாவெளி) போன்ற 5 பிரதேச செயலாளர் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கூடுதலாக உள்ளது. இதனால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு விவசாய உற்பத்திகளும் பாதிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மௌனித்த 2007 ஆண்டிக்கு பின்னரே யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று எல்லைப்புற பொதுமக்கள், விவசாயிகள் கூறுகின்றார்கள். 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2018 வரையும் என்றும் இல்லாதவாறு 100க்கு மேற்பட்ட காட்டு யானைகள் இப்பகுதியிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயன்தரும் மரங்கள், மேட்டு நிலப்பயிர்கள், வேளாண்மைச் செய்கை, ஏனைய மக்கள் வாழும் வீடுகள் போன்றவற்றை அழித்தும், சேதப்படுத்தியும்,சில மனிதர்களுக்கு உயிராபத்தையும், காயங்களையும் ஏற்படுத்தியுள்ளன. 10 வருடங்களுக்கு மேலாக காட்டு யானைகள் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளன.

2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரையும் யானைகள் தொடர்பான தகவல்கள், மாவட்ட அனர்த்த பாதுகாப்பு சேவைநிலையத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இதுவரையில் 45கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார். 42 பேர் யானை யினால் காயமடைந்துள்ளார்கள். 632 பொதுமக்களின் வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

இவ்வாறான அனர்த்தங்களை கட்டுப்படுத்த பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினாலும், அரசியல்வாதிகளினாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச உயர் அதிகாரிகளுக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரையும் முழுமையான தீர்வுகள் எட்டப்படவில்லை. இதனால் உயிர் அச்சுறுத்தல்கள் மத்தியில் போராடிக் கொண்டிருக்கும் வறுமைப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து மனக்கிலேசங்களுடன் வெறுப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதல்கள் இடம்பெறும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், பாலர் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வீழ்ச்சி கண்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மாணவர்களின் வீழ்ச்சி காரணமாக 100க்கு மேற்பட்ட பாடசாலைகள் வெறிச்சோடிப் போயுள்ளன. சில பாடசாலைகளை 24 மணி நேரமும் யானைகள் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இதனால் இப்பாடசாலைகளை கல்வித்திணைக்களம் முற்றுமுழுதாக மூடியுள்ளது.இன்னும் பல பாடசாலைகள் மூடப்பட வேண்டிய தேவையுள்ளது.

இவ்வாறு காட்டுயானைகளின் தொல்லையினாலும், அச்சுறுத்தல்கள் அசம்பாவிதங்களினாலும் பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். எல்லைப்புறங்களில் காட்டுயானையின் தொல்லையினால் பெரிதும் பாதிக்கப்படுவதும், உயிரிழப்புக்களையும், பாதிப்புக்களையும் சந்திப்பவர்கள் தமிழர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

காட்டு யானைகளினால் 20 வருட காலப்பகுதியால் சுமார் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 7500கும் மேற்பட்ட தென்னை மரங்களை

யானைகள் அழித்தும், சேதப்படுத்தியும் உள்ளன. எனவே, மீண்டும் தென்னைமரம், பலாமரம், வாழைமரம் போன்றவை நடுவதற்கான விசேட திட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதி கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை யானைகள் உடைத்து குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், அதிகாலை மீண்டும் வேலியை உடைத்து வெளியேறுவதும் கிட்டத்தட்ட 15 இடங்களில் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்றன. இதைத்தடுத்து நிறுத்துவதற்காக யானைவேலிகளை உடைக்காமல் இருப்பதற்கு பாதுகாப்புக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். குறிப்பாக யானைகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமாயின் யானைகள் நுழைந்துவரும் எல்லைப்புறங்களில் வனஜீவராசிகள் அமைச்சும், திணைக்களமும் இணைந்து சரியான திட்டமிடல்களுடன் எல்லைப்புறங்களில் கிளை அலுவலங்களை அமைத்து யானைலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் வனஜீவராசிகள் திணைக்களம் யானைகளின் நுழைவிடங்களையோ அல்லது யானைகள் அதிகமாக காணப்படும் இடங்களை மையப்படுத்தியோ மாவட்டத்திற்குரிய பொறுப்பதிகாரி அலுவலகத்தை திறக்கவில்லை என்பது எல்லோரும் சொல்லும் கருத்தாகவுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் இதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் உள்ளது. தற்போது யானைகள் நுழைய முடியாத, விவசாயப் பயிர்கள் இல்லாத இடமாகவுள்ள மட்டக்களப்பு மாநகரை மையப்படுத்திய கல்லடியில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாவட்டத்திற்குரிய பொறுப்பதிகாரி அலுவலகத்தை அமைத்துள்ளது.இதனால் பொதுமக்களை யானைகளிடம் இருந்து பாதுகாக்காமல் தினமும் பொதுமக்களை யானையின் தாக்குதல்களுக்குட்படுத்தியுள்ளதுடன், மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களமானது மாவட்ட பொதுமக்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இது வேதனைக்குரிய விடயம் மட்டுமல்ல, அச்சமும் அதிர்ச்சியும் மிக்கதாகவும் உள்ளது. எனவே கல்லடியில் அமைந்துள்ள அலுவலகத்தை பொதுமக்களின் இருப்பிடங்களைத் தேடி நுழையும் எல்லைப்புற கிராமங்களை மையப்படுத்தி அங்கே அமைக்க வேண்டும்.

இதைத் தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலையடிவட்டை,க ச்சக்கொடிசுவாமிமலை, வாகரை, புல்லுமலை ஓமடியாமடு போன்றவற்றில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கிளை அலுவலகங்களை உருவாக்க வேண்டும். வனஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பபட்டாலும் நியமிக்கப்படும் உத்தியோகஸ்தர்கள் தொடர்ச்சியாக கடமையாற்ற முடியாமல் வேலையை கைவிட்டுச் செல்கின்றார்கள். ஆளணியை அதிகரிக்கும்போது பொதுமக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்கமுடியும்.வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கிளை அலுவலகங்களை அமைப்பதற்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் அரசகாணிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இருந்தும் வனஜீவராசிகள் திணைக்களம் தங்களின் கிளை அலுவலகத்தையோ அல்லது மாவட்ட பொறுப்பதிகாரி அலுவலகத்தையோ இதுவரையும் எல்லைப்புறங்களில் அமைக்காதது ஏன் எனும் கேள்வி பொதுமக்கள்,விவசாயிகள் மத்தியில் எழுகின்றது. (மிகுதி அடுத்த வாரம்)

வெல்லாவெளி க. விஜரெத்தினம்

Comments