சர்கார் சிங்கிள் டிராக் பாடியது யார்? | தினகரன் வாரமஞ்சரி

சர்கார் சிங்கிள் டிராக் பாடியது யார்?

சர்கார் படம் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே உருவாகி வருகிறது. விஜய் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

சன்பிக்சர்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் இசையினை அக்டோபர் 2ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு முன் ரசிகர்களின் வேண்டுதலுக்கு இணங்க நாளை படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட உள்ளனர்.

விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த பாடலை யார் பாடியிருப்பார் என பலரும் யோசித்து வந்த நிலையில் முந்தைய சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் திவாகர் பாடியிருக்கலாம் என்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது.

இவர் ஏற்கனவே மெர்சல் ஆளப்போறான் தமிழன் பாடலை பாடியிருக்க வேண்டியது, ஆனால் சில காரணங்களால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments