20 கிலோ எடை குறைக்கும் ஜெயம் ரவி | தினகரன் வாரமஞ்சரி

20 கிலோ எடை குறைக்கும் ஜெயம் ரவி

தான் நடிக்க இருக்கும் புதிய படத்துக்காக, 20 கிலோ எடை குறைக்கிறார் ஜெயம் ரவி. ‘அடங்க மறு’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அறிமுக இயக்குநரான கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதில், ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார். இருவருமே நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்தாலும், இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் செப்டம்பர் 20 அன்று தொடங்கியுள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில், பள்ளி மாணவன் வேடத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இதற்காக 20 கிலோ உடல் எடையைக் குறைக்கப் போகிறார்.

Comments