அபான்ஸுடன் இணைந்து OPPO F9 அதிர்ஷ்டசாலி தெரிவு | தினகரன் வாரமஞ்சரி

அபான்ஸுடன் இணைந்து OPPO F9 அதிர்ஷ்டசாலி தெரிவு

OPPO இன் புதிய அறிமுகமான OPPO F9 ஐ அபான்ஸ் காட்சியறையிலிருந்து கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகள் மற்றும் வியப்பூட்டும் பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்பை OPPO ஏற்படுத்தியுள்ளது.

OPPO F9 அதிர்ஷ்டசாலி தெரிவினுௗடாக, இம்மாத இறுதிக்குள் OPPO F9 ஒன்றை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 43 அங்குல LED TV மற்றும் 5 Air Fryerகள் போன்றவற்றுடன், மேலும் பல அன்பளிப்புகளும் வழங்கப்படும். இதற்காக வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது, நாடு முழுவதிலும் காணப்படும் எந்தவொரு அபான்ஸ் காட்சியறையிலிருந்தும் OPPO F9 ஐ கொள்வனவு செய்வதாகும்.

இந்த OPPO F9 அதிர்ஷ்டசாலி தெரிவு திட்டத்தை OPPO உடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இளைஞர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பைப் பெற்ற வர்த்தக நாமமாக OPPO திகழ்வதாகத் தெரிவித்த அபான்ஸ் பிஎல்சி சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் பிரிட்ஸ் பெர்னான்டோ வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்ச்சியான மீளக்கொடுப்பனவு திட்டங்களை வழங்கும் அபான்ஸிடமிருந்து எந்தவொரு OPPO F தெரிவு கையடக்க தொலைபேசியையும் இலகுவாக கொள்வனவு செய்வதுடன், அதற்காக வெகுமதிகளையும் பெற்றுக் கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட OPPO F9 என்பது VOOC Flash Charge வசதியை கொண்டுள்ளது. சாதாரண சார்ஜ் முறையை விட நான்கு மடங்கு வேகமான சார்ஜ் திறனை வழங்குகிறது. சார்ஜ் செய்யப்படும் வேகத்தை நான்கு மடங்கினால் அதிகரித்துள்ளதுடன், VOOC இனால் ஐந்து லேயர் பாதுகாப்பு அடெப்டர் முதல் போர்ட்டுக்கும் தொலைபேசியின் உள்ளக பகுதிக்கும் வழங்கப்படுகின்றன. அவசரமான தேவைகளின் போது, 5 நிமிடங்கள் சார்ஜ் செய்து, 2 மணித்தியாலங்கள் வரை உரையாடக்கூடிய சார்ஜை கொண்டிருக்க முடியும்.

இளம் நுகர்வோரின் அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில், OPPO இனால் Sunrise Red மற்றும் Twilight Blue ஆகிய இரு வர்ணத் தெரிவுகளில் கையடக்கத் தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Comments