முதலாவது மதிநுட்பமான ஸ்மார்ட் ஸ்கூட்டர் - TVS NTORQ 125 இலங்கையில் | தினகரன் வாரமஞ்சரி

முதலாவது மதிநுட்பமான ஸ்மார்ட் ஸ்கூட்டர் - TVS NTORQ 125 இலங்கையில்

உலகப் புகழ்பெற்ற மோ ட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உற்பத்தியாளரான TVS மோட்டர் கம்பனி அதன் முதலாவது மதிநுட்பமான ஸ்மார்ட் ஸ்கூட்டரான TVS NTORQ 125 ஐ இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. TVS SmartXonnect* எனும் தொழில்நுட்ப கட்டமைப்பு உள்ளடங்கியுள்ளதால் இலங்கையின் முதலாவது கையடக்க தொலைபேசியுடனான இணைப்பைக் கொண்ட ஸ்மார்ட் ஸ்கூட்டராக இது அமைந்துள்ளது. இளைஞர்களை இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் TVS ரேசிங் கட்டமைப்பின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் கொண்ட CVTi-REVV 3 Valve என்ஜின் உடன் விற்பனையாகின்றது.

இதன் அறிமுக நிகழ்வு கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த TVS மோட்டர் கம்பனியின் சர்வதேச வியாபாரங்களுக்கான சிரேஷ்ட உப தலைவர் ஆர். திலிப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த தயாரிப்புகளை வடிவமைப்பதில் TVS மோட்டர் கம்பனி எப்போதும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். TVS NTORQ 125 அறிமுகத்துடன் இலங்கையில் ஸ்கூட்டர்களை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் இளம் தலைமுறையினருக்கு அதிகளவு அம்சங்கள் நிறைந்த கண்கவர் தயாரிப்பை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. TVS SmartXonnect அடங்கலாக சுமார் 30 உள்ளம்சங்களை முதன் முறையாக தன்வசம் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், நாட்டின் ஸ்கூட்டர் சந்தையில் அதிகளவு வரவேற்பை பெறும் என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.

TVS லங்கா பிரைவட் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் TVS NTORQ 125 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வருவதுடன் இளைஞர்கள் இந்த தயாரிப்பில் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர்.

கண்கவர் வடிவமைப்பு ஆகாய விமானம் ஒன்றின் வடிவமைப்புக்கு நிகராக அமைந்த TVS NTORQ 125, எடுப்பான கண்கவர் தோற்றத்தை கொண்டுள்ளதுடன் விசேடமான LED பின்புற விளக்குகளை கொண்டுள்ளது. எடுப்பான முனைத் தோற்றங்களினால் ஸ்கூட்டருக்கு ஸ்போர்டி தோற்றம் சேர்க்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான ஸ்டப் மஃவ்லர், முன்புற விளக்கு கட்டமைப்பு மற்றும் கீழ் பகுதி போன்றவற்றுடன் டயமன்ட் கட் அலோய் வீல்கள் போன்றன சிறந்த தோற்றத்தை ஸ்கூட்டருக்கு சேர்த்துள்ளன.

Comments