விற்பனை மற்றும் விநியோக அலுவலகம் கொழும்பில் | தினகரன் வாரமஞ்சரி

விற்பனை மற்றும் விநியோக அலுவலகம் கொழும்பில்

கோழி உற்பத்தித்துறையில் முன்னணி நிறுவனமான கிறிஸ்ப்றோ தமது செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக புதிய விற்பனை மற்றும் விநியோக அலுவலகத்தை அண்மையில் திறந்து வைத்துள்ளது. அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய குளிர்சாதன களஞ்சிய வசதிகளைக்கொண்டுள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள சுப்பர் மார்க்கட், சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு கிறிஸ்ப்றோ உற்பத்திகளை மிக இலகுவான முறையில் கொண்டு சேர்ப்பதற்காக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து வசதியை கொண்ட இடமான தெற்கு அதிவேக வீதியில் கடுவெலை பரிமாற்றத்துக்கு அருகில் பழைய அவிசாவளை வீதி, வெலிவிட்ட பகுதியில் இந்த அலுவலகத்தை திறந்துள்ளதுள்ளது.

அலுவலகத்தின் திறப்பு விழா அண்மையில் கிறிஸ்ப்றோ குழும தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் மொஹமட் இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவன ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலக்கு மற்றும் தரிசனம் இருந்தால் எந்தவொரு சவாலையும் வெற்றி பெறலாம். கம்பளையை கேந்திரப்படுத்தி இற்றைக்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிதாக ஆரம்பமான கிறிஸ்ப்றோ நிறுவனம் தற்போது இலங்கையிலுள்ள பாரிய நிறுவனமாகும்.

இலங்கை முழுவதும் எமது நிறுவனம் வியாபாரத்தை மேற்கொள்கின்றது. புதிய அலுவலகம் ஊடாக கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தின் செயற்பாடுகளை வெற்றிரகமாகவும் செயற்திறன்மிக்க வகையிலும் முன்னெடுக்கலாம். எதிர்காலத்தில் கிறிஸ்ப்றோ உற்பத்திகள் சர்வதேச சந்தையையும் வெற்றி கொள்ளும் என்றார் மொஹமட் இம்தியாஸ்.

1972 ஆம் ஆண்டு 100 கோழி குஞ்சுகளுடன் ஆரம்பமான கிறிஸ்ப்றோ அன்று முதல் சந்தையில் முன்னணியில் செயற்படுகின்றது. தரம், புத்துணர்வு மற்றும் நவீனமயத்துக்காக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து இலங்கையின் முன்னணி கோழி உற்பத்தி வர்த்தக நாமமாக முன்னேறியது.

Comments