Vivo V11Pro AI ஸ்மார்ட் ஃபோன் இலங்கை சந்தையில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

Vivo V11Pro AI ஸ்மார்ட் ஃபோன் இலங்கை சந்தையில் அறிமுகம்

Vivo இலங்கையில் தனது புதிய கையடக்க தொலைபேசி தெரிவான Vivo V11Pro ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய AI- வலுவூட்டப்பட்ட புகழ்பெற்ற V தெரிவுகள், AI கெமராவுடன் காணப்படுவதுடன், பாவனையாளர்களுக்கு சிறந்த படத்தை எந்த தருணத்திலும் எடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. AI சேவைகளினூடாக, மதிநுட்பமான, எளிமையான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும். Vivo வின் V11Pro இல், சிறந்த வடிவமைப்புகள் உள்ளடங்கியுள்ளதுடன், புதிய Halo FullView டிஸ்பிளே அடங்கியுள்ளது. Starry Night வர்ணத்தில் வரும் Vivo V11Pro AI வளைந்த 3D body கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், சிறந்த பாவனையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. V11Pro என்பது, V தெரிவு கட்டமைப்புக்கான In-Display Fingerprint Scanning தொழில்நுட்பம் அடங்கியுள்ளதுடன், பயோமெட்ரிக் பாதுகாப்பில் Vivo இன் தொழில்நுட்ப தலைமைத்துவ நிலையை தொடர்ந்து உறுதி செய்துள்ளதுடன், கவர்ச்சியான மற்றும் அழகிய வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

Vivo மொபைல் லங்கா பிரை​ெவட் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் கருத்துத் தெரிவிக்கையில், வாடிக்கையாளர்களை கவனத்தில் கொண்டு புத்தாக்கங்களை முன்னெடுப்பது என்பது எமது இலக்காகும். AI- வலுவூட்டப்பட்ட V11Proஐ அறிமுகம் செய்வதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், எமது பாவனையாளர்களுக்கு மிகவும் பிரத்தியேகமான அனுபவத்தை ஏற்படுத்தவும் எண்ணியுள்ளோம். உலகின் வெவ்வேறு பாகங்களில் காணப்படும் மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு புதிய புத்தாக்கங்கள் மற்றும் சிறந்த அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்“ என்றார்.

V11Pro’இன் AI ஐ ​ெகமரா சிறந்த படங்களை இலகுவாக எடுக்கக்கூடியது

V11Pro தொடர்ச்சியாக Vivo இன் சிறந்த புகைப்படம் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் V9 வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகளவு கேள்விகள் நிலவிய புகைப்பட கலையம்சங்களை உள்வாங்குவதற்காக தனது AI ஐ திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.

Comments