தங்கொட்டுவ பீங்கானின் ‘பரிசுக்குத் தயார்’ பரிசுப் பொதிகள்! | தினகரன் வாரமஞ்சரி

தங்கொட்டுவ பீங்கானின் ‘பரிசுக்குத் தயார்’ பரிசுப் பொதிகள்!

ஆடம்பரமான மற்றும் நேர்த்தியான பீங்கான் மேசைப் பொருட்களை வழங்குவதில் பெயர்பெற்ற தங்கொட்டுவ பீங்கான் பீஎல்சி நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களை வழங்குவதில் சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில் ‘பரிசுக்குத் தயார்’ (Ready to Gift) எனும் தொனிப் பொருளில் தனித்துவமான பீங்கான் பரிசுப்பொதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அறிமுக விலையான 3000 ரூபா அல்லது அதற்கு மேலான தொகையில், வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவகையில் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசு வழங்குவதற்கு ஏற்ற வகையில் பொதி செய்யப்பட்டவாறே இந்தப் பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பரிசுக்குத் தயார் பொதிகள் ஆறு பகுதிகளைக் கொண்ட ‘தேனீர் கோப்பை செட்’, 10 துண்டுகளைக் கொண்ட ‘தேனீர் கோப்பை செட்்’, எட்டு துண்டுகளைக் கொண்ட ‘டினர் செட்’, 14 துண்டுகளைக் கொண்ட தேனீர்கோப்பை மற்றும் டினர் செட்களைக் கொண்ட கலப்பு, 24 துண்டுகளைக் கொண்ட கலப்பு செட் ஆகியவற்றை கொண்டதாகக் காணப்படுகின்றன.

திருமணம், புதுமனை புகுதல் மற்றும் பிறந்தநாள் விழா போன்ற விஷேட நிகழ்வுகளுக்கு பரிசில்களை வழங்கக்கூடிய வகையில் தங்கொட்டுவவின் ‘பரிசுக்குத் தயார்’ பரிசுப் பொதிகள் அமைந்துள்ளன. இவை உலோகப் பொருட்கள் போன்ற பார்வையையும், உணர்வினையும் வழங்கக் கூடிய தனித்துவமான பரிசுப்பொருட்களாகவும் காணப்படுகின்றன. தங்கொட்டுவ பீங்கானின் நேர்த்தியான மற்றும் தனித்துவமான வெள்ளைநிற பீங்கான் தட்டுக்கள், கோப்பைகள் மற்றும் சோசர்கள் வசதியானதும், பெருமையானதுமான பரிசில்கள் வழங்கப்படுகிறது என்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஏற்கனவே பரிசுக்கு ஏற்ற வகையில் பொதிசெய்யப்பட்டுள்ள ‘பரிசுக்குத் தயார்’ எனும் தொனிப்பொருளிலான தனித்துவ பரிசுப் பொதிகள் கொழும்பில் உள்ள சகல தங்கொட்டுவ பீங்கான் காட்சியறைகளிலும் கிடைக்கும்.

Comments