British School of Commerce வணிக கற்கைகளுக்கான ஆரம்ப மற்றும் உயர்நிலை டிப்ளோமா பாடத்திட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

British School of Commerce வணிக கற்கைகளுக்கான ஆரம்ப மற்றும் உயர்நிலை டிப்ளோமா பாடத்திட்டங்கள்

London School of Commerce Group of College வணிக கற்கைகளுக்கான லண்டன் பாடசாலை நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான Timothy AshanthaAndradiயால் 2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட British School of Commerce நிறுவனம் London School of Commerce Group of Collage நிறுவனத்தின் ஒருபகுதியாகச் செயல்படுவதோடு இந்நிறுவனம் இம் மாதம் முதல் ஆரம்ப, உயர்நிலை டிப்ளோமா மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களையும் ஆரம்பிக்கின்றது. இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் அதிதிகள் மத்தியில் LSC கூட்டு நிறுவனத்தின் சர்வதேசத்துறை வளர்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் John Philips கருத்துத் தெரிவிக்கையில், வியாபாரத் துறையில் ஆரம்ப மற்றும் உயர்நிலை டிப்ளோமா கற்கையானது மாணவர்களை தமது இறுதி பட்டப்படிப்பை நோக்கி முன்னெடுத்துச் செல்வதோடு அவர்களுக்கு பல்வேறு நாடுகளிலும் தமது விருப்பத்திற்கேற்ற வகையில் கற்கையை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. அது மட்டுமல்லாது இங்கு வழங்கப்படும் ஆரம்பநிலை மற்றும் உயர்நிலை டிப்ளோமா பாடநெறிகள் Scottish Qualification Authority (SQA) ஸ்கொடிஸ் தகுதி ஆணையத்தின் மூலம் வழங்கப்படுவதால் உலகின் அதிகமான நாடுகளில் அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உயர்நிலை டிப்ளோமாவை பூர்த்திசெய்வதன் பிரதான அனுகூலம் என்னவெனில் இக்கற்கை நெறியைப்பூர்த்தி செய்தவர்களுக்கு குறைந்த செலவில் இலங்கையில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்ய முடியும். மேலும் விரும்புகின்ற மாணவர்களுக்கு ஐக்கிய இராச்சியம், கனடா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்யவும் முடியும் எனத் தெரிவித்தார்.

வியாபாரத்துறையில் ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை டிப்ளோமா நிகழ்ச்சியானது முழுக் கற்கைநெறியில் ஆரம்பச்சுற்றாகவே காணப்படுகின்றது. மாணவர்கள் விரும்பும் பட்சத்தில் இலங்கையிலோ அல்லது ஐக்கிய இராச்சியத்திலோ 28 மாதங்களில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்ய முடியும்.

Comments