Jaguar Land Rover இன் வர்த்தக மூலோபாய | தினகரன் வாரமஞ்சரி

Jaguar Land Rover இன் வர்த்தக மூலோபாய

அறிவிப்பை விடுத்துள்ள SML Frontier Automotiveஇலங்கையில் Jaguar Land Rover வாகனங்களின் ஏகபோக முகவரான SML Frontier Automotive நிறுவனம், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Jaguar Land Rover Asia Pacific அதிகாரிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் எதிர்வரும் ஆண்டில் தனது வர்த்தக வளர்ச்சி மூலோபாயம் தொடர்பில் அறிவித்துள்ளது.

பொரலஸ்கமுவில் அமைக்கப்படவுள்ள உலகளாவிய இணக்கப்பாட்டைக் கொண்ட சில்லறை வர்த்தக மையத்தின் மீது மேற்கொள்ளப்படவுள்ள 5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை முதலீட்டுடன் தனது புதிய வளர்ச்சித் திட்டங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 110% விற்பனை அதிகரிப்புடன் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் Jaguar Land Rover இன் அதிகரித்த சந்தைப் பங்கிற்கு SML Frontier Automotive நிறுவனம் தொடர்ந்தும் தனது காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றது.

தொழிற்துறைப் புத்தாக்கத்தில் வர்த்தக நாமத்தின் ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு புதிய Jaguar Land Rover உற்பத்தி வடிவமும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களையும் கொண்டிருக்கும். அனைத்து வகையான வடிவங்களிலும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களைக் கொண்ட புதிய உற்பத்தி வரிசையானது முழுமையாக மின்சாரத்தால் இயங்கும், ஹைபிரிட் மற்றும் மிதமான ஹைபிரிட் (mild hybrid) வடிவங்களைக் கொண்டிருக்கும். பிரசித்தி பெற்ற இரு பிரித்தானிய கார் வர்த்தக நாமங்களான Jaguar மற்றும் Land Rover ஆகியவற்றின் இணைப்பாக கட்டியெழுப்பப்பட்டு ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பாரிய முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனத்தால் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டானது Jaguar மற்றும் Land Rover ஆகிய இரண்டையும் பொறுத்தவரையில் இலங்கையில் ஒரு மகத்தான ஆண்டாக அமையவுள்ளதுஎன்று Jaguar Land Rover Asia Pacific நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான றொபின் கோல்கன் குறிப்பிட்டார்.

Comments