காரணம்தான் புரியவில்லை... | தினகரன் வாரமஞ்சரி

காரணம்தான் புரியவில்லை...

நெஞ்சின் விம்மல்

நீண்டு விரிந்து

செல்கையில்

துயர ஒலிகள்

தூரிகையாகிறது

சோகச் சித்திரங்களை

வாழ்க்கை வடிவங்களாக்க

காற்றின் ஒலிகள்

காதுகளை வசப்படுத்தி

நெஞ்சுக்குள்

இனிப்பு வைத்த

அந்த நினைவுகள்

நிலைக்க முடியாத

நீர்த்துளியாகி

வறண்டு போகிறது மகிழ்வு!

மௌன மொழியில்

புதைந்து கிடந்த

அர்த்தங்கள்

மனசு தொட்டதில்

சிலிர்த்துப் போன

உணர்வுகள்

சிதைந்து போனது

கனப் பொழுதில்!

ஒற்றை விரல்

தொட்ட மகிழ்வு

கலைந்து போகு முன்னம்

கட்டை விரல்

அறுத்து

காயம் நோக வைத்த

காரணம்தான் புரியவில்லை

எனக்கு!

Comments