திறன்களுக்கான தேடலில் SEF | தினகரன் வாரமஞ்சரி

திறன்களுக்கான தேடலில் SEF

செரண்டிப் எடியுகேஷனல் பவுண்டேஷன் ஆனது அதனது 27 ஆவது வருடாந்த அமர்வுகளை கொழும்பு சுற்றுலாப் பயணசபையின் கேட்போர் கூடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று நடத்தியது.

செரண்டிப் எடியுகேஷனின் சாதனையாளர்களுள் ஒருவரான அகீல் மொஹம்மட்டினால், விசேட கேள்வி பதில் அமர்வொன்றும் நடத்தப்பட்டது.

“திறமைக்கான தேடலில் எதிர்காலச் சந்ததியினரின் வெற்றிக்கான சகலவழிகளும் ஆராயப்படுகின்றன” என்றார் செரண்டிப் எடியுகேஷனல் பவுண்டேஷனின் பேச்சாளர்.

SEF ஆனது திறமை மிக்க மாணவர்களுக்கு மாதாந்த உதவிகளை வழங்குகின்றது. இவ்வுதவியானது கல்விசார் நிறுவகங்கள் மற்றும், கல்விக்கான உதவிகளைச் செய்யும் நிறுவகங்களுக்கு திட்ட அடிப்படையிலான உதவிகளாக அமைகின்றது. SEF இன் எதிர்காலத் தொலைநோக்கானது, எதிர்கால பத்திஜீவி சமூகத்தினர், தங்கள் அறிவைப் பெறுகையில் உயர்ந்த திறன்களை அடைந்து கொள்ளல் என்பதாக அமைந்துள்ளது.

1991 ஆம் ஆண்டுமுதல் செரண்டிப் எடியுகேஷனல் பவுண்டேஷன் ஆனது சுமார் 3000 மாணவர்கள் வரை புலமைப்பரிசில்கைள வழங்கியுள்ளது. SEF ஆனது அதனது 26 ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகையில் வசதியற்ற மாணவர்களும் கல்வி கற்பதற்கான சம வாய்ப்பினை வழங்குகின்றது.

SEF Pathways புலமைப்பரிசில் திட்டமானது, SEF வழங்கும் பல்வேறுபட்ட திட்டங்களுள்் ஒன்றாகும் என்பதோடு 2017 ஆம் ஆண்டில் உச்சமடைந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். இத்திட்டமானது திறமையான உயர் தர மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகத்தின் பங்களிப்பினைக் கோரியிருந்தது.

கண்டி மற்றும் கொழும்பில் இருந்து இதற்கென இரண்டு பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த இளம் சமூக்தினருக்கான உதவிகளை வழங்குவதில் SEF உறுப்பினர்கள் அந்த பத்துப் பாடசாலைகளின் அதிபர்களோடும், நெருக்கமாகப் பணியாற்றியதோடு, மாணவர்களோடும் அவர்களது ஆசிரியர்களோடும் கிரமமான சந்திப்புக்களை மேற்கொண்டனர்.

மாணவர்களை சிறந்ததொரு பாதையில் வழிகாட்டுவது, SEF இனது இன்னொரு பரிமாணமாகும். மாணவர்கள் தொடர்பில் பங்களிப்பது வழிகாட்டல் ஆகும்.

Comments