தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் | தினகரன் வாரமஞ்சரி

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

தொழில்துறையை மேம்படுத்துவதற்கான  சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய

கொழும்பு சினமன் கிராண்டின் ஓக் அறையில், “திங்கிங் அவுட் ஒஃப் தி பொக்ஸ்" என்ற தலைப்பில் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தங்களது வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வினை நடாத்தியது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து சிறப்பித்தார். பெருந்தோட்ட மற்றும் தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பெருமளவிலான பிரமுகர்களும், புத்திஜீவிகளும் கலந்துகொண்டனர். இது மந்தநிலையிலுள்ள தேயிலை தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இலங்கை தேயிலை தயாரிப்பில் உலகின் நான்காவது பாரிய இடத்திலும், தேயிலை ஏற்றுமதியில் மூன்றாவது இடத்திலும் இருந்தாலும், பல காரணிகளால் சமீபத்திய ஆண்டுகளில் தேயிலைத் தொழிற்துறை மந்தநிலையிலுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 ஜூலை வரையிலான காலப்பகுதியில் தேயிலை உற்பத்தி 182.2 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் அதேகாலப்பகுதியில் ஒப்பிடும்போது அது 182.4 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளது. தேயிலை உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சற்று குறைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் கடந்த 7 மாதங்களில் 162.7 மில்லியன் கிலோகிராமாக பதிவு செய்யப்பட்டிருந்தது, இது முந்தைய ஆண்டின் இதேகாலப்பகுதியில் 165.3 மில்லியன் கிலோ கிராமாக இருந்தது. இருப்பினும், தேசியப் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பாக,தேயிலை தொழில்துறை வருவாயானது 2018ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சிறிய சாதகமான விளைவைக் காட்டியது, இது ரூ. 134 பில்லியன், முந்தைய ஆண்டு முதல் ரூ.2 பில்லியன் தொகையால் அதிகரித்துள்ளது.

இந்த விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக, தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இம்முறை “திங்க்கிங் அவுட் ஒஃப் தி பொக்ஸ் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது.

Comments