இந்தியப் பிரதமர் மோடி பிரதமர் ரணிலிடம் கவலை | தினகரன் வாரமஞ்சரி

இந்தியப் பிரதமர் மோடி பிரதமர் ரணிலிடம் கவலை

இலங்கையும் இந்தியாவும் 2017ஆம் ஆண்டு செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக் ைகயின் பிரகாரம், இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார்.

எனவே, இந்தச் செயற்றிட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்ைககளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் ெகாண்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் புதுடில்லி நகரில் உள்ள ஐதராபாத் மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தபோதே பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கோரிக்ைகயினை விடுத்தார். பிரதமர் மோடி இலங்கைக் குழுவினருக்குப் பகல் போசன விருந்தையும் அளித்தார்.

இராஜதந்திர ரீதியாகக் கூடுதலான நேரத்தை இலங்கைக்காகச் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்த இந்தியப் பிரதமர், இவ்வாறான நிலையில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்காக இலங்கையிடமிருந்து கிடைக்கும் பிரதிபலிப்பு குறித்துத் தாம் கவலையடைவதாகவும், தம்மீதோ, இந்திய அரசின் மீதோ ஏதாவது சந்தேகமோ பிரச்சினையோ காணப்படுமாக இருந்தால், தயக்கமின்றிப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கேட்டுக்ெகாண்டார்.

பிரதமர் மோடி மீதோ இந்திய அரசின் மீதோ தனக்குள்ளும் இலங்கை மக்கள் மத்தியிலும் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது

என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறு தவறான புரிதல் ஏற்படுவதற்கு ஏதாவது ஒரு காரணி அடிப்படையாக இருந்திருக்கு மாயின் அதற்காகத் தமது கவலையைத் தெரிவித்துக்ெகாள்வதாகவும் குறிப்பிட்டார் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments