கட்டமைப்பை நிறுவ SDB வங்கி அனுசரணை | தினகரன் வாரமஞ்சரி

கட்டமைப்பை நிறுவ SDB வங்கி அனுசரணை

கிராமிய முயற்சியாளர்களுக்கு என்றும் உதவிக்கரமாகவுள்ள SDB வங்கி, கதிர்காமம் ஸ்ரீ அபினவராம விகாரையில உயிர் வாயு கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அனுசரணை வழங்கியிருந்தது. வருடத்தின் யாத்திரை காலத்தில் கதிர்காமத்துக்கு விஜயம் செய்யும் சுமார் 1,000க்கும் அதிகமான பக்தர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் இந்த கட்டமைப்பை நிறுவ SDB வங்கி நிதி அனுசரணை வழங்கியிருந்தது. இந்த உயிர் வாயு கட்டமைப்பை விகாரையின் மகா தேரருக்கு அண்மையில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மொனராகலை மாவட்ட செயலாளர் திருமதி. டி.எஸ். பத்மகுலசூரிய, SDB வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி சமீர டி லியனகே, SDB வங்கியின் கூட்டுறவு பிரிவின் பிரதானி பி.டி.தம்மிக, வங்கியின் ஊவா பிராந்திய முகாமையாளர் கே.பி.ரத்நாயக்க மற்றும் இதர விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

புதிய உயிர் வாயு கட்டமைப்பின் நிறுவுகையுடன், ஸ்ரீ அபினவராம விகாரையின் தினசரி வலுத் தேவைகளின் செலவை சிறிதளவில் குறைத்துக் கொள்ள முடியும் என்பதுடன், சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பையும் குறைத்துக் கொள்ள முடியும்

மொனராகலை மாவட்ட செயலாளர்w. டி.எஸ். பத்மகுலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “பொறுப்பு வாய்ந்த குடிமக்கள் எனும் வகையில், சூழலுக்கு எம்மால் ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். ஒவ்வொரு வருடமும் இலட்சக் கணக்கான பக்தர்கள் இந்த புனித நகருக்கு விஜயம் செய்கின்றனர். இது போன்ற செயற்பாடுகள் பல வழிகளில் பயன்தருவதாக அமைந்திருக்கும். இந்த உயிர் வாயு கட்டமைப்பு நீண்ட கால அடிப்படையில் பயனளிப்பதாக அமைந்திருப்பதுடன், எமது தொழில்முயற்சியாளர்களுக்கு நிலைபேறாண்மை மற்றும் இலாபகரத்தன்மையை நோக்கி நகர்வதற்கு இது முன்னுதாரணமாக அமைந்துள்ளது” என்றார்.

Comments