சைபர் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி | தினகரன் வாரமஞ்சரி

சைபர் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி

இன்றைய காலகட்டத்தில் வியாபாரங்களை பொறுத்தமட்டில் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. குறிப்பாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியைப் போன்று பரிபூரண டிஜிட்டல் வங்கிச் சேவைகளை வழங்கும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளில் பெருமளவில் தங்கியிருக்கும் வியாபாரங்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தயார்நிலைக்கான தேவை ஆகியன, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ குழுவினரை 'Game of Threats' எனும் பிரத்தியேகமான சைபர் பாதுகாப்பு மூலோபாய பயிற்சி திட்டத்தில் ஈடுபட செய்திருந்தது. வியாபார தலைவர்களுக்காக பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தினால் இந்த பயிற்சி வழங்கப்படுகின்றது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியை பொறுத்தமட்டில் தகவல் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். நிறுவனம் ISO 27001 சான்றளிக்கப்பட்டதுடன், உலகத் தரம் வாய்ந்த தகவல் பாதுகாப்பு, பாதுகாப்பு மீளாய்வுகள் போன்றவற்றை வருடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மேற்கொள்கிறது. தமது கட்டமைப்புகளை மெருகேற்றம் செய்வதற்கு வங்கியினால் பெருமளவு வளங்கள் வருடாந்தம் ஒதுக்கப்படுவதுடன், பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் போன்ற சர்வதேச புகழ்பெற்ற நிறுவனங்களுடன் பணியாற்றி, தனது தகவல் மற்றும் தரவு கட்டமைப்புகளின் வலிமையை உறுதி செய்கிறது.

சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில் சைபர் பாதுகாப்பு பயிற்சியை நாம் தற்போது 3ஆவது தடவையாக முன்னெடுக்கிறோம், ஆனாலும், கேம்கள் மற்றும் சிமியுலேஷன்களை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சாதாரணமாக, எமது சைபர் பாதுகாப்பு பயிற்சிகளில் வகுப்பறை அமர்வுகளை நாம் முன்னெடுப்பதுண்டு, ஆனாலும் வகுப்பறை அமர்வுகளின் போது நிஜ வாழ்க்கையில் எழக்கூடிய அனுபவங்கள் கிடைப்பதில்லை. பாரதூரமான சைபர் பாதுகாப்பு பிரச்சினைகள் எழும் போது, சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நிஜ வாழ்க்கை அனுபவத்தை கொண்டிருப்பது அத்தியாவசியமானதாகும். உதாரணமாக கருதினால், விமானிகள் தாம் விமானத்தை செலுத்தும் பயிற்சிகளை சிமியுலேற்றரில் பெறும்போது, அவர்களுக்கு வெவ்வேறு அவசர நிலைகள் தொடர்பான சந்தர்ப்பங்கள் வழங்கப்படும், இவற்றை கையாண்டு அவர்கள் பயிற்சிகளை பெறும் போது, நிஜமான விமானத்தை செலுத்துகையில் அவ்வாறான இடர்கள் ஏற்பட்டால், எவ்வாறு சிறந்த முறையில் செயலாற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.

Comments